பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘78 தென்னர் குல பழிதீர்த்த தெய்வப் பாவை to: வரையாது வழங்கினர். இகத்தினில் இன்பம் எழுந் தது. யாவரும் அங்கயற்கண்ணி தன்னேடு ஆலவாய் அமர்ந்த அமலனை அன்புடன் வணங்கினர். பாண்டிமா தேவியார் தம் வரம் பலித்ததென்று பரவசம் உற்ருர். இவ்வம்மையாரால் அன்ருே தென் னர் குலம் உற்ற பழி திரப் பெற்றது. தமிழ் நாடு தான் உற்ற இடர் நீங்கியது. இத்துணைக்கும் மாபெ ருங் காரணர் யார்? மங்கையர்க்கரசியார் அல்லரோ ? இத்தகைய அம்மையாரைத் தென்னர்குல பழி தீர்த்த தெய்வப் பாவை என்று கூறுவது சாலப் பொருத்த மானதன்ருே ? தெய்வச் சேக்கிழார் இம்மங்கை யாரை மாதரசியாராகக் கருதிலர். மாதெய்வ மாகவே கருதினர். இம்மங்கையார் திருவடிகளைப் போற்றுவாரைத் தாமும் போற்றுவதாகக் கூறுகிரு.ர். மங்கையர்க்குத் தனிஅரசி எங்கள் தெய்வம் வளவர்திருக் குலக்கொழுந்து வளைக்கை மானி செங்கமலத் திருமடங்தை கன்னி நாடாள் தென்னர்குலப் பழிதீர்த்த தெய்வப் பாவை எங்கள்பிரான் சண்பையர்கோன் அருளி ளுலே இருந்தமிழ்கா டுற்றஇடர் நீங்கித் தங்கள் பொங்களிவெண் திருநீறு பரப்பி ஞரைப் போற்றுவார் கழலெம்மால் போற்றல்ாமே. என்னும் இப்பாடலைப் பாடுவோமாக. பாடி இன்புறு வோமாக. சேக்கிழார் பெண்கள் இனத்திற்குப் பேறு தந்து பேசியதைச் சிந்திப்போமாக.