பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 தாலியை ஈந்த தையல் பொருந்துவதாகும். அறிவு நிரம்பப்பெற்ற அந்தணர் சிகாமணியாக இருந்தமையால்தான் வேணிப் பிரான் கழல் பேணிவாழும் பெற்றிபெற்றனர். ' கற்றதனல் ஆயபயன் என்கொல் வாலறிவன் கற்ருள் தொழாஅர் எனின் ” எனும் குறட்பொருளே உணர்ந்து இறைவ ரிடத்து உருகிய அன்பும் கூர்ந்த சிங்தையும் வாய்ந்து ஒழுக்கம் வழுக்கா ஒண்மையும் உடையராய்த் திகழ்ந் தார். சேக்கிழார் கலயனர் குண நலங்களைக் குறிப்பிடு கையில் ஈற்றில் ஒழுக்கம் மிக்கார் என்று நினைவுடன் கூறியதைச் சிறிது சிந்தித்தல் வேண்டும். மக்கள் குடிப்பிறப்பால் தம்மை உயர்வாகக் கருது த ல் வ ழ க் க மா. க இருந்துவருகிறது. அது முறை யன்று. ஒழுக்கமே உயர்வுக்குக் காரணம் என்பது வள்ளுவர் போன்ற தெள்ளறிவுடையார் துணி பாகும். இத்துணிவு பொய்யில் புலவராம் திருவள்ளு வர்க்கு இன்று எனில், ஒழுக்கம் உடைமை குடிமை, இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும். என்று இயம்பமாட்டார். இவ்வாறு பொதுப்படக் கூறினும் பொதுமக்கள் புரிந்துகொள்ளுதல் சிறிது அருமை என்பதை உன்னிய பெரியார், மறப்பினு மோத்துக் கொளலாகும், பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும் ' என்று இன்றியமையாத ஒழுக்கத்தின் உயர்வை அங் தணர்க்கே சிறப்பாகக் கூறிப்போந்தார். இதனால் ஏனையவர் ஒழுக்கத்தினின்றும் வழுக்கி வாழலாம் என்று எண்ணுதல் கூடாது. ஒழுக்கம் அற்றவர்