பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணவரைத் திருத்திய காரிகை 89 வளத்தினல் ஆண்டு வாழும் மக்கள் மாடமாளிகை களிலும் கூட கோபுரங்களிலும் வாழ்ந்தனர் என் பதும் உடனே புலகுைம் உண்மைக் கருத்தாகும். இதனையே தெற்றத்தெளியச் சண்பையர் கோன், செல்வ நெடுமாடம் சென்றுசேண் ஓங்கிச் செல்வ மதிதோயச் செல்வம் உயர்கின்ற செல்வர் வாழ்தில்லை ! என்று செப்பிப் போயினர். இத்தகைய தென்னாட்டின் ஒரு திலகமெனத் திகழும் தில்லேமா நகரில் ஒரு குலாலனர் வாழ்த்து வந்தனர். அவர் இல்லற நெறியை மேற்கொண் டொழுகிய இளைஞர். இறையன்பு நிறையப் பெற்ற இன்குனர். கூத்தரசனது குரை கழலேக் கும்பிடும் கலத்தின் மிக்கவர். தம்மாலான அறச் செயல்களே யும் அட்டி இன்றி ஆற்றிவந்தவர். ஒல்லும் வகையால் அறவினே ஒவாதே செல்லும்வா யெல்லாம் செயல் என்னும் சீரிய கொள்கையினர். உலகில் ஒரு சிலர் செல்வம் இருந்தால் மாத்திரம் சீரிய அறத்தைச் செய்ய இயலும் என்று எண்ணித் தம்மால் இயல் வதையும் இயற்ருது வாளா நாளேக் கழித்துவருவர். அக்குலாலர்ை அன்னர் குழுவில் அகப்பட்டவர் அல்லர். ' என் கடன் பணி செய்து கிடப்பதே ' என்னும் கொள்கையுடன், மெய்யன்புடையவர்க்குத்' தம்மாலான தொண்டு புரிந்துவந்தனர். தம் குலத் தொழிலாகிய மட்பாண்டம் செய்யும் பணியில் ஈடு பட்டுப் பிச்சை ஏற்றுப் பிரானப் போற்றும் பெருங் குழுவினர்க்கு மண் ஓடு கொடுத்து மகிழ்ந்து'