பக்கம்:வையைத் தமிழ்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. கடவுளும் காதலும் உலகில் கடவுள் நெறி பல்லோரால் போற்றப்படு கின்றது. வழிபடு முறையும் வாழ்த்தும் நெறியும் எத்தனையோ வகையில் மாறுபடுகின்றன. என்ருலும், முடிவில் அனைத்தும் ஒன்ருகவே முடியும் என்பர் சம நெறியீட்டாளர். பல்வேறு சமயங்களே கதிகளாகவும், கடவுள் அவையெலாம் இறுதியில் சென்று சேரும் கடலாகவும் காட்டப்பெறுவதை அறிவோம். எனவே, வழிபாட்டு முறை மாறுபட்டாலும், கடவுள் உணர்வு பலரிடம் குடிகொண்டுள்ளது என்பதை அறி வோம். சிலர், ‘க ட வு ள் நெறி கொள்ளின், காதல் நெறியில் உயிர்கள் செல்ல இயலாது, என்று வாதிடுவர்; காதல் கடவுள் கெறிக்கு முற்றிலும் மாறுபட்டது, என்றும் கூறுவர். கடவுள்ே அடைய வேண்டுமாயின், காதலே அறவே கைவிட வேண்டும்,' என்பர். வேதாந்திகள் உலகம் அனைத்தும் மித்தை என்று காட்டி, "பெண்ணுகியதொரு மாயப் பிசாசம் என்றுகூடப் பெண்களை நிந்திப்பார்கள். ஆல்ை, ஆழ்ந்து நோக்கின், உண்மைக் கடவுள் நெறி மனத்துாய்மையிலேதான் உள்ளதென்றும், மனத் தூய்மை உடையார் இல்லற வாழ்வில் மனைவி மக்களோடு வாழ்ந்திருப்பின் இறையருள் பெறக் கூடும் என்றும் கூறுவர். "மணத்தகத் தழுக்கருத மெளனயோக ஞானிகள் வனத்தகத் திருப்பினும் மனத்தகத் தழுக்கருர்; மனத்தகத் தழுக்கறுத்த மெளனமற்ற விரதிகள் தனத்தடத் தருப்பினும் மனத்தகத் தழுக்குருர்.' என்னும் சித்தர் பாடல் இது பற்றியே எழுந்ததாகும். இன்பம் இருவகையாகப் போற்றப்படுகின்றது. ஒன்று சிற்றின்பம்; மற்றது பேரின்பம். இரண்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/104&oldid=921707" இலிருந்து மீள்விக்கப்பட்டது