பக்கம்:வையைத் தமிழ்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுளும் காதலும், 99 முறைப்படி மேற்கொள்ளும் இன்ப நெறிகளேயாகும். காதல் இருவர் கருத்தொருமித்து ஆதரவு பெறுவது சிற்றின்பமாகும். அது போன்றே, நீயும் நானுமாய் ஏக போகமாய் இயைந்து வாழ்வோம்,' என்று ஆண்டவனே வேண்டி இரண்டறக் கலத்தல் பேரின்ப மாகும். எனவே, இரண்டும் தம்மை மறந்து, இரு வரும் ஒருவராக இயையும், சிறப்பிலேதான் முடிகின் றன. இல்லறத்தில் சிறக்க வாழ்ந்து, 'அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை, என்பதை நில காட்டி உயர்ந்தவர்களே, பின் இறைவனேடு இரண்டறக் கலக்கும் பேரின்ப வாழ்வுக்கும் உரியவர்களாவார்கள் என்ற உண்மை நன்கு புலகுைம். பெரிய புராணத்தில் வரும் நாயன்மாருள் பலர் இல்லறத்தில் வாழ்ந்து இறையடியுற்றது இந்த உண்மையைத்தான் காட்டு கின்றது. இந்த உண்மையின் அடிப்படையிலேதான் மாணிக்கவாசகர் தம் திருக்கோவையாரும் பிற கோவைகளும் உருவாயின. எனவே, சிற்றின்ப வாழ் வும் பேரின்ப வாழ்வும்-கடவுள் கெறியும் காதல் நெறியும்-ஒன்றை ஒன்று, பற்றி வாழ்வனவே. இந்த உண்மையைப் பாரதியார் தம் பாடலில் பல வகையில் விளக்கிக் காட்டுகின்ருர், காதல் என்பது தாய்மை உடையது; மாற்றம் இல்லாதது; என்றென்றும் பற்றிக்கொண்டு வருவது. ஒரு தலைவி, தன் தலைவன், இந்தப்பிறப்பில் உன்னே விட்டுப்பிரியேன், என்று கூறக் கண்ணிர் வடித்தாள் என்பதை வள்ளுவர், . "இம்மைப் பிறப்பில் பிரியலன் என்றேளுல் கண்ணிறை நீர்கொண் டனள்! என்கிரு.ர். எனவே, அவர்களுக்குள் உண்டாகிய காதல் உறவு என்றென்றும் பிரிக்க முடியாத ஒன்ரு கும்; அது என்று கோன்றியது எனவும் காட்ட முடியாது. தேவையாயின், மணம் புரிந்து, அன்றேல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/105&oldid=921709" இலிருந்து மீள்விக்கப்பட்டது