பக்கம்:வையைத் தமிழ்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 வையைத் தமிழ் என்பன சிலப்பதிகார அடிகள். இவ்வாறு இளங்கோ வடிகள் கண்ணகுக்கும் மாதவிக்கும் யாதொரு வேறு பாடும் காணுராய்ச் செல்லுகின்ருர் என்பதை அறியின் மாதவியின் மாண்பு நன்கு புலகுைம். மாதவி கலைச்செல்வியாய் இருந்தாள். கோவலன் ஒரு வேளை கலை ஆர்வம் உற்றவய்ை இருந்திருக்கலாம். அந்தக் கலை ஆர்வத்தால் கோவலன் தன்னை மறந்து உற்ற பொருளை அவள் வழிச் செலவிட்டிருக்கலாம். அவள் கலே நலத்தையெல்லாம் தொகுத்து ஆசிரியர், 'எண்ணும் எழுத்தும் இயல்ஐந்தும் பண்ணன்கும் பண்ணின்ற கூத்துப் பதினென்றும்-மண்ணின்மேல் போக்கினுள் பூம்புகார்ப் பொற்ருெடி மாதவி வாக்கினல் ஆடரங்கில் வந்து.' என்ற வெண்பாவால் காட்டியுள்ளார். இவ்வாறு மாதவி கற்புடைப் பெண்ணுய் மட்டுமன்றி, கலைச் செல்வியாயும் விளங்கிளுள் எனவும் அறிகிருேம். கோவலன் இக்கலை வழியாகவோ அன்றி அவள் அழகு காரணமாகவோ தன் னே அவளுக்கு உரியவனக்கிக் கண்ணகியைப் பிரிந்து வாழ்ந்தான் என்பது காம் காண்பதாகும். - இனி அவர்கள் பிரிந்த கட்டத்தை நாம் நோக்கு வேர்ம். மாதவி காவிரியை முன்னிறுத்தி, அதன் வளத்துக்குக் காரணம் அங்காட்டு மன்னகிைய சோழனே எனப் பாராட்டுகிருள். அதைத் தவருக உணர்ந்து கொள்ளுகின்ருன் கோவலன். உணர்ந்த கிலேயிலேயும், மாதவியை நன் மனேவியாக எண்ணி, கணவன் வேற்று மகளிரை மருவின் கற்புடை மகளிர் புலத்தல் கூடாது என்பதைத் தன் பாட்டில் காட்டு கின்ருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/28&oldid=921792" இலிருந்து மீள்விக்கப்பட்டது