பக்கம்:வையைத் தமிழ்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 வையைத் தமிழ். டுக்களே பிள்ளைத் தமிழ் என்னும் பெரிய தமிழாகப் பிற்காலத்தில் உருப்பெற்று வளர்ந்தன. சைவம் வைணவம் என்ற இரு சமயங்களிலும் முதற்பொருளாகச் சிவனையும் திருமாலையும் போற்றி" வழிபடுகின்றனர். அவர்களுக்குச் சக்திகளாகவும், வேறு வகையிலும் சில கடவுளர்கள் பேசப்படுகின்ருர் கள். அண்டங்கடந்து நிற்கும் ஆண்டவன் மக்களுக்கு. எளிமையில் தோன்றிக் காட்சி அளித்து அருள் புரியக் கொண்ட நெறிகள் பல. சிவனுடைய விளையாடல் களும், திருமாலின் பத்து அவதாரங்களும் அத்தகைய நெறிகள் வயப்பட்டனவே. சத்தியாகிய உமையும் அவ ளுக்கு மக்களாகக் காணும் பிள்ளையாரும் முருகனும் பிறவும் இறைவனுடைய அருள் தோற்றக் கூறுகள் என்பர் ஆய்வாளர். சிவனுடன் ஒன்றியதாகக் காணும் சக்தியைப் பிரிக்க முடியாது என்ருலும், அடியவர் அச் சத்தியை அன்னையாகக் கண்டுபோற்றி வழிபடுவதைக் காண்கின்ருேம். இவ்வாறு போற்றப்படும் தெய்வ நெறிகளுள்ளே பிள்ளையாகப் போற்றும் நெறி ஒரு வகை. அந்த வகையில் அம்மையும், பிள்ளேயாம்'முருக லும் பிள்ளைப் பருவத்தில் போற்றப்பெறுகின்றனர். இன்னும் விநாயகரும் அந்த நிலையிலே வைத்துப் போற்றப் பெறுவர். கடருளர்களேயன்றி, கடவுள் நெறி காட்டிக் கடவுள் கிலேயுற்ற சேக்கிழார் போன்ற, மெய்யடியார்களும்,கடல் சூழ்ந்த உலகத்தைத் திருமா லெனக்காத்து அருளாட்சி புரிந்த குலோத்துங்கன் போன்ற அரசர்களுங்கூடப் பிள்ளைகளாகப் போற்றப் பெறுவார்கள். இவ்வாறு கடவுளர்களும் கடவுள் அருள்வழி ஒழுகும் நல்லவர்களும் பிள்ளைத் தமிழ்ப் பாடல்களால் பிள்ளைகளாகப் போற்றப் பெறுவதைக் காண்கின்ருேம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/54&oldid=921848" இலிருந்து மீள்விக்கப்பட்டது