பக்கம்:வையைத் தமிழ்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எத்தன கோடி இன்பம் 77° இன்னமொரு முறைசொல்வேன் பேதை நெஞ்சே! எதற்கும்.இனி உளைவதல்ை பயன்ஒன் றில்லை: முன்னர்கமது இச்சையில்ை பிறந்தோம் இல்லை; முதல்இறுதி இடைநமது வசத்தில் அல்ல; ன்ைனுமொரு தெய்வத்தின் சத்தி யாலே வையகத்தில் பொருளெல்லாம் சலித்தல் கண்டாய்;. பின்னஒரு கவலையும்இங்கு இல்லை நாளும் பிரியாதே விடுதலையைப் பிடித்துக் கொள்வாய். ' (பேதை நெஞ்ச, 132): இவ்வாறு தம் நெஞ்சினை முன்னிறுத்திக் கூறிய பாரதியார், தரணியில் அறிவற்று மூட மனத்தால் துன்பம் எண்ணி வாடுபவரையும் காண்கின்ருர்; அவர் களுக்காக இரக்கப்படுகின்ருர்; அவர்களே நோக்கியும் தீமையெல்லாம் திரும்பி வாராது ஒழிய வழி காட்டு கின்ருர். அவர் மக்களுக்குக் காட்டுவது என்ன? சென்றதினி மீளாது, மூட ாேlர்ே • சென்றதையே தினந்தினமும் சிங்தை செய்து கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர், சென்றதனக் குறித்கல் வேண்டா! இன்றுபுதி தாய்ம்பிறந்தோம் என்று விேர் - எண்ணைைதத் தண்ணமுற இசைத்துக் கொண்டும் தின்றுவிள்ை யாடிஇன்புற் றிருந்து வாழ்வீர்: தீமையெலாம் ஒழிந்துபோம்; திரும்பி வாரா. ' என்று மக்களுக்கு அறிவுறுத்துகிருர் பாரதியார். இவ்வாறு துன்பம் மறந்து அனேததிலும் இன்பம். காண்பதுவே 'வீடு ஆகும். அலுவலக வேலைகளிலும் இன்னில்களிலுமிருந்து விடுபட்டு, அவற்றின் கவலே. களேயெல்லாம் மறந்து, இன்பம் பெற வருவது நாம்: நாடொறும் வாழும் வீடு ஆகும். அது போன்றே ‘சிங்தையும் மனமும் செல்லா நிலைமைத்தாகிய வீடும்' எல்லாக் கவலேயும் துறந்து வாழ்வதேயாகும். இவ்ல வுலகில் எல்லாத் துன்பங்களையும் இன்பமாகக் கண்டு வாழ்வார்-அப்பர், மணிமொழியார் போன் ருர்யாதினும் இன்பம் காணும் நல்லவர்-மண்ணுல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/83&oldid=921912" இலிருந்து மீள்விக்கப்பட்டது