பக்கம்:வையைத் தமிழ்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘78 வைண்யத் தமிழ் .கிலேயே விண்ணுலகைக் காண்பவராவர்; உலகிலேயே விட்டைக் காண்பவராவர். அல்லாதார், ஒன்றை கினைந்து ஒன்றைப் பற்றித் தவம் என்றும், பிற என்றும் காட்டி உலகை ஏமாற்றி, அவம் புரிபவரே யாவர். தங்கள் கருமத்தை உலகில் செய்து மற்றவர் களுக்கு உதவுபவர்களே உண்மையில் தவசிகள். காணுத ஒன்றுக்கு ஆசைப்பட்டுக் கந்த மூலாதிகளே உண்டு காடு வாழ்பவர்கள், ஆசையுட்பட்டுத் தவமல்லா அவம் செய்பவர்கள் என்பது வள்ளுவர் கருத்து. இதைத்தான் வள்ளுவர், தவம்செய்வார் தம்கரும்ை செய்வார்; மற்றல்லார் அவம்செய்வார் ஆசையுட் பட்டு. என்று காட்டுகின்ருர். இதற்கு வேறு பொருள் காண விழைவார், வள்ளுவர் உள்ளத்தை மறைப்பவரே யாவர். ஏனெனில், வள்ளுவர் காட்டுத் தவத்தைத் தவம் எனவே கொள்ளவில்லை; அதற்கு மாருக. "மழித்தலும் டேட்டலும் வேண்டா என அதை இழித் துரைக்கின்ருர், மற்றும் தவம் என்பதைத் தேற்றேகாரம் தந்து உற்ற நோய் நோன்றல், உயிர்க் குறுகண் செய்யாமை, அற்றே தவத்துக்கு உரு, என வினக்குகின்ருர். எனவே, உண்மைத் தவம் வாழ் வாங்கு வாழ்ந்து. துன்பத்திடையில் இன்பங்கண்டு, மனேவி மக்களோடு வீட்டில் வாழ்வதேயாகும. இவ்வுண்மையைப் பாரதியார், கவலை துறந்திங்கு வாழ்வது வீடென்று காட்டு மறைகளெல்லாம்-நீவிர் அவலே கினைத்துமி மெல்லுதல் போலிங்கு அவங்கள் புரிவீரோ! ' (ஞானப்பாடல், 192) என நன்கு விளக்கிக் காட்டுகின்ருர். இதே நிலையிலே தான் ஆண்டவனுடைய அடியவரும் இருப்பார்கள். உலகில் மற்றவர்களுக்காக வாழ்ந்து அன்பில் சிறக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/84&oldid=921914" இலிருந்து மீள்விக்கப்பட்டது