பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவி அலங்காரம் 91 83. தாலப் பருவம் அலகில் கருணைக் குறிப்பால் உளத்தெழும் அன்புடனே உலகை எஞ் ஞான்றும் விழிப்பொடு காக்கும் உழைப்பருமை இலகும் உனக்குத் துயில்வரத் தால்பாடல் எங்ங்ணம் நான் விலகிகின் றே'உமா ! தாலேலோ’ என்று விளம்புவனே. (உ) தேவி அளவுக்கு அடங்காத கருணையே அடிப்படையாக எழுந்த அன்புடன் உலகை எப்போ தும் விழிப்புடன் காக்கும் உழைப்பினையுடைய உனக்குத் துயில் வரும்படி ங்ான் எப்படித் தாலேலோ பாடு வேன்? (அது முடியாத காரியம்) . ஆதலால் ஒருபுறம் விலகி நின்றே 'உமாதேவி - தாலேலோ” என்று 'எனக்குள்ளே பிதற்றிக் கொண்டிருப்பேன். (கு) அலகு - அளவு 3 - தாலப்பருவம் : குழந்தை யைத் துயிலச்செய்வோர் 'தாலேலோ’ எனப்பாடுதல். தாலாட்டு - தால் எனக்குறுகி கிற்கின்றது. இது 8-ஆம் மாதத்தில் இயம்பப்படுவது. 84. சப்பரணிப் பருவம் ای எப்பாடு பட்டும் இசைஞானம் என்றும் எனக்கிலை நான் தப்பான ராகதா ளத்துடன் பாடித் தவிப்புறுவேன் இப்பாரில் தோன் குரு, ராக தாள இலக்கணத்தைச் சப்பாணி கொட்டி அதனல் விளக்குக சாம்பவியே. (உ) சாம்பவி நான் என்ன பாடுபட்டும் இசை ஞானத்தைப் பெறமுடியவில்லை. அதனுல் தப்பான ராகதாளத்துடன் கான் பாடித்தவிக்கிறேன். நீ எனக் குக் குருவாக விளங்கிச் சப்பாணி கொட்டுதலிலிருந்தே எனக்கு ராக தாளம் விளங்கும்படி அருள் புரிவாயாக.