பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவி அலங்காரம் 99 97. ஜே.ஜெய ஜேஜெய காகினி ஜே.ஜெய ஹாகினி சிற்சுகமே ஜேஜெய சாகினி ஜே.ஜெய மோகினி சிற்பரையே ஜேஜெய மங்கலை ஜே.ஜெய பிங்கலை சின்மயமே ! ஜ்ேஜெய சூலினி ஜே.ஜெய மாலினி தேன்மொழியே (உ) தே ன் போ லும் மொழிகளையுடைய தேவி! காகினி ஹாகினி சாகினி மோகினி மங்கலை ! பிங் கலை ! சூலினி மாலினி உனக்கு ஜேஜெய வெற்றி ! வெற்றி ! (கு) சுவாதிஷ்டானத்தில் ஆறிதழ்த் தாமரையில் வீற்றிருக்கும் திருக்கோலம் காகினி. காகினி-பொன்னிற முடையவள். ஹாகினி - ஆக்ஞை என்னும் ஆதாரத்தில் ஈரிதழ்த் தாமரையில் ஆறுமுகத்தோடு எழுந்தருளி யிருக்கும் அம்பிகை, வெண்ணிறமுடையவள். மூலா தாரத்தில் கான்கிதழ்த் தாமரையில் ஐந்து முகத்தோடு வீற்றிருக்கும் திருக்கோலம். சாகினி, சாகினி-கரியங்ற முடையவள். மோகினி - 'அந்தரி பார்வதி மோகினிதிருப்புகழ்-812. பிங்கலை, மங்கலை - செய்யுள் 95-இன் குறிப்பைப் பார்க்க. சூலினி திரிசூலத்தைத் தரித்தவள், மாலினி - மாலையை அணிந்தவள். மாலின்யை'(லலிதா - 455). 98. மங்களம் மங்களம் காரணி பூரணி மாலினியே! மங்களம் காரணி மங்களம் ஆரணி மாமணியே ! மங்களம் சாமளை மங்களம் கோமளை மாதுமையே! மங்களம் சுந்தரீ மங்களம் அந்தரீ வைணவியே !