பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவிப் பத்து-1 107 (உ) ('ஆண்டவன் பிச்சை” என்னும் பக்த சிரோமணியாகிய) மரகதம்மா எனப் பெயர் கொண்ட தாயின் டினமே - தனது மயில்வாகனம் போல - விற்றி ருக்கும் இடமாகக் கொண்ட துரை - முருகவேளின் தாயே! புண்ணியர்களான ஆறு அன்பர்கள் பரகதி பெறும்படி , திருப்பரங்குன்றத்தில் உதவின முருக வேளுக்கு வேற்படையைத் தந்த தேவியே (கு) 1. மரகதம்மா என்பவர் மகாபக்த சிரோமணி: அக்தனர் குலத்து அருட்கவி. 2. பராசர முகிவரின் புத்திரர்கள் அறுவர் சாபத் தாற் சரவணப் பொய்கையில் மீன்களாகக் கிடந்தனர். முருகவேளுக்கு உமையம்மை தந்த பால் அப்பொய்கை யிற் சிதறினதை உண்டு சாபம் திரப் பெற்றனர். முருகவேள் இவர்களுக்குத் திருப்பரங்குன்றத்தில் ஞானுேபதேசம் செய்தனர் . (கந்தபுராணம் 1-13-33; I-25-24; V-1-23.] 3. சூரனுக்குக் குதிரைமுகம் என்று தக்கயாகப் பரணி 162, 231 உரை கூறுகின்றது. 'திருமுருகாற்றுப்படை' (57) - இருபேர் உருவின் ஒருபேர் யாக்கை' - “குதிரை முகமும் மக்கள் உடலுங் கொண்ட சூரபன்மா’. சூரனைச் சம்மாரம் செய்யத் தேவிவேற்படை கொடுத்தாள் முருகவேளுக்கு. தேவி அலங்காரம் - செய்யுள் 75-இன் குறிப்புரையைப் I_ITT அ அ , துரகதம்=குரகதம்=குதிரை, சூராரி - சூரனுக்குப் பகைவராம் முருகவேள். =