பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6]தேவிப் பத்து அறுசீரடி ஆசிரிய விருத்தம் மூன்ரும் பத்து 1. திருவடியைப் பெற திருமகள் வலக்க ணுக்கொள் தேவிகின் பாதங் காணப் பெருகிய காத லால்கின் பெருமைசேர் கோலங் கண்டேன் இருவினைப் பிறவி வேண்டேன் என்றைக்கும் அடிமையானேன் இருமலர்ப் பாதம் ஈவாய் என்கணில் உள்ள தாயே! (உ) திருமகளை வலக்கண்ணுகக் கொண்ட தேவியே! உன் திருவடியைக் காணும் ஆசையால் உன் திருவோலக்க தரிசனம் எனக்குக் கிடைத்தது : நான் பிறவியை வேண்டேன்; கான் என்றும் உனக்கு அடிமை; உன் திருவடி கிழலை எனக்குத் தந்தருள் ; என் கண்களுள் விளங்கும் தாயே ! (கு) திருமகள் தேவியின் கண் : தேவி அலங்காரம் பாடல் 80, தேவி அநுபூதி செய்யுள்-15-இன் குறிப் புரையிற் பார்க்க. என்கணில் உள்ள தாயே என் கணில் வளருஞ் சிவகாமி'-திருப்புகழ் - 608. 2. தேவி காஞ்சியில் தவம் செய்தது இளமயில் போன்ற நங்காய் ! இதயத்திற் குதே இல்லாய் ! களரிறக் கரிய கண்டக் கடவுளை அணைய வேண்டி உளமதில் வேட்கை யாகி உண்மையாம் தவமுங் கொண்டு தளமதிற் காஞ்சி சார்ந்து தழைந்தனை தொண்டைநாட்டில். (உ) இளமயிலன்ன தேவி வஞ்சனையிலாதவளே! நீலகண்டப் பெருமானை அணைய விரும்பிக் காஞ்சியில் மெய்த்தவம் கொண்டு விளங்கினை.