பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XV பிறகு ஒரு நாள் தன்னை ஒரு வெகு சிறிய விநாயகர் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு தேவியை மும்முறை வலம் வந்த தாகக் கனவு கண்டார். மறுதினமே ஒருவர் ஸ்படிக விநாயக விக்ரஹம் ஒன்றை விற்பனைக்குக் கொண்டு வந்தார். ஸ்வாமிகள் சொன்னதையும், தனது கனவையும் கினைந்து அன்பர் உடனே அந்த விக்ரஹத்தை வாங்கி வெள்ளிக்கிழமைகள் தோறும் தேவி யின் அருகில் அந்த விநாயகரை அமர்த்தி அவர்க்கும் அபிஷேகம் பூஜை முதலிய செய்துவந்தார். தேவி, திருமுல்லைவாயில் வந்த பிறகு விநாயகருக்குத் தனி விமானம் ஒன்று செய்யப்பட்டது. இன்றும் அந்த ஸ்படிக விநாயகருக்கு விசேஷ தினங்களில் தேவி யுடன் அபிஷேக ஆராதனைகள் நடந்து வருகின்றன. XIII. ŘSD)sest சென்னையில் ஒரு வியாபாரி தள்ளுபடியான உபயோகமற்ற செப்பு, பித்தளைச் சாமான்களைச் சேகரித்து ஏற்றுமதி செய்து வந்தார். அவர் சரக்குகளை அன்பர் பணியாற்றி வந்த கம்பெனியில் இன்ஷ்யூர் செய்து வந்தார். அத் தள்ளுபடி சாமான்களில் ஏதாவது சிறந்த விக்ரஹங்கள் இருந்தால் அவற்றை வாங்கிக் கொள்ளலா மெனக் கருதி, தனது உதவியாளரை வியாபாரியிடம் 1943 ஞ்ஸ் இறுதியில் அனுப்பினர். உதவியாளரும் பஞ்ச லோகத்தில் செய்த அதி ரமணியமான ஒரு சிறிய தேவி விக்ரஹத்தை வாங்கி வந்தார். விக்ரஹத்தைப் பார்த்ததுமே அன்பருக்கு அதன்மேல் அன்பு உண் டாயிற்று. தனது அறையில் ஒரு விமானம் செய்வித்து அதில் அந்த விக்ரஹத்தை வைத்துத் தின்ந்தோறும் காலையில் புஷ்பாஞ்சலி செய்து வந்தார். பிரயாணம் செய்யும் பொழுதும் விக்ரஹத்தை உடன் எடுத்துச் சென்று தினம் பூஜை செய்து வந்தார். அப்போ தெல்லாம் விடுமுறைக் காலங்களில் அன்பர் பாகோ பாரம் வந்திருப்பது வழக்கம். வரும்பொழுது விக்ரஹத்தைக் கொண்டு வருவார். திரும்பிச் சென்னை செல்லும்போது கொண்டுபோவார்.பிறகு அன்பருடைய நண்பர் ஒருவர் கிரந்தரமாக பாகோ பாரத்தில் இருக்க லாஞர். ஒரு சமயம் விடுமுறையின்போது தன்னுடன் கொண்டு வந்த விக்ரஹத்தைப் பாகோ,பாரத்திலேயே வைத்துத் தான் இல்லாத சமயம் தன் நண்பர் பூஜை செய்பும்படி ஏற்பாடு செய்தார்.