பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 வைஷ்ணவி சங்கிதிமுறை பாம்புருவுடன் சென்று துரத்திக் கொத்திக் கொன்ற தாக வரலாறு. 25. அபிராமிப் பட்டருக்கு அருளியது இருள் சேர் இரவை இது பெளர் ணமியென் ருெருபக்த சிகா மணிசொல் உரையில் ஒருதப் பிலையென் றுலகோர் உணர கிருபித்தவொர் அற்புத நின்மலையே. (உ) இருண்ட அமாவாசைத் தினத்தைப் பெளர்ணமி இன்று' என உரைத்த ஒரு பக்த சிகா மணியின் உரை உண்மையே என (உலகுக்குக்)காட்டிய அற்புதத் தேவியே ! (கு) பக்த சிகாமணி - அபிராமிப் பட்டர் ; இவர் அபிராமி அந்தாதி பாடினவர். திருக்கடவூர்த் தேவி அபிராமி அம்மையின் திருவடித் தொழும்பு பூண்டவர். ஒருநாள் தலயாத்திரையாக வந்த தஞ்சை மன்னர் இவரைச் சந்தித்தபோது இன்று என்ன திதி?” என்று கேட்டார். அன்று அமாவாசையாயிருந்தும், தேவியின் திருமுக நிலா ஒளியில் ஈடுபட்டிருந்த பட்டர் இன்று பெளர்ணமி என்று பதில் உரைத்தார். இதனைக் கேட்டவர்கள் பட்டரை எள்ளி நகையாடினர். தம் தவறு புலப்பட, பட்டர் வருந்தித் தேவியின் திருவருளை நாடித் துதிக்கத், தேவி தன் காதில் இருந்த குழையை வானில் வீசி எறிந்து பெளர்ணமி ஒளியை, எங்கும் பரப்பினள். இதைக் கண்டவர்கள் 'ஆஹா பட்டர் பெளர்ணமி என்றது உண்மையாயிற்று' τε" στοστ அற்புத மனத்தினராயினர் . என்பது-விரலர் அறு. ، .مية فة