பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவி அநுபூதி 33 சரணம் சரணம் இடியார் விடையாய் சரணம் சரணம் பிடிகேர் கடையாய் சரணம் சரணம் கொடிகேர் இடையாய் சரணம் சரணம் சரணம் சரணம் உமையே ! வணக்கம். (உ) இடி போன்ற குரலை உடைய விடையை உடையவளே பெண் யானை போன்ற நடையை உடையவளே! கொடி போன்ற இடையை உடைய வளே ! உமா தேவியே ! சரணம், சரணம், சரணம். (கு) இடியார் விடை-இடியன்ன குரலை உடைய இடபம். இடியார் குரல் ஏறு -சம்பந்தர் 1-34-3. இடியார் ஏறுடையாய்-சம்பந்தர்-3-55-2. பிடி-பெண் யானை. தேவி அநுபூதி முற்றும்