பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவி அலங்காரம் 41 பெண்ணுக அவதரித்தவள். மதங்கர் குலப் பெண் களிற் ருேன்றிய எம்பெரு மாட்டி', 'துலினி மாதங்கி: அபிராமி அந்தாதி உரை-70, 50. மாதங்கி வேதஞ் சொல் பேதை நெடு நீலி -திருப்புகழ் 93. கழற்போதுதிருவடிமலர். வைப்பு-சேமித்து வைத்த பொருள். 6. பாடி உருக ஊதியம் வேண்டாத உள்ளத் திலகும் உணர்வுடன் யான் ஒதியும் பாடி உருகவும் கண்பார் : உயர்சிவத்தின் பாதியும் ஆன பராபரை ! பைங்கிளி பார்ப்பதியே! ஆதியும் அந்தமும் இல்லா தொளிரும் எம் ஆரணங்கே ! (உ) சிவனது பாதியான தேவியே! கிளியே பார்வதியே ஆதி அந்தம் இல்லாதவளே லாபகர மான உலகப் பொருள்களை விரும்பாத உள்ளத்து உணர்வுடன் உன்னை ஒதிப்பாடி உருகக் கடைக் கணித்தருள். (கு) ஊதியம்-லாபம். 7. குறையுள யான் வினையை ஒழிப்பதெவ்வாறு ? எத்திக் கிலுமுன் இணையடி ஏத்தி இறைஞ்சுதற்குப் பத்தியும் இல்லை, பரவசம் இல்லை, பதமலரைத் துத்தியஞ் செய்ய மனமதும் இல்லை, தொடர்வினையை எத்தகை யாலொழித் தின்புறு வேன்சொல் இளங்கிளியே! (உ) எங்கு உன்னைக் கண்டாலும் உன் திருவடியை ஏத்திப் பணியும் பக்தி என்னிடத்து இல்லை; உன்னைக் கண்டு பரவசம் அடைகின்றேன் இல்லை; உன் பாத மலரைத் தோத்திரம் செய்ய மனமும் இல்லை; தேவியே!