பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவி அலங்காரம் 47 வாய்ந்தவளே ! பாம்பாபரணம் கொண்டவளே ! திருமுல்லை வாயிலில் வீற்றிருப்பவளே ! TGr&ూr ஆண் டருளுக. (கு) மர்த்தித்த-கலக்கி அடித்த அகி-பாம்பு. அகி லாண்ட காயகி-திரு ஆனைக்காத் தலத்துத் தேவி. மகிஷாசுரன்-இந்த அசுரன் பல உருவம் எடுத்துத் தேவி யுடன் போர் புரிந்தவன். மகிஷ (எருமை) உருவுடன் இவன் போர் புரியும்போது தேவி இவனைச் சங்கரித் தாள. 17. தேவியின் நுதல் அழகு உலகம் புரக்கும் திருவுடை யாளே ! உமையவளே ! இலகும் பணிச் சடை ஏய்ந்தஎம் ஈசற் கினியவளே ! திலகம் இலகுன் நுதலெழில் கண்ட திருட்டிகொண்டு கலகம் செறிபொருள் ஒன்றையும் காணேன் கனவினுமே. (உ) உலகத்தைக் காத்தளிக்கும் பெருமாட்டி : சிவபிராற்கு இனியவளே திலகம் விளங்கும் உன் கெற்றியின் அழகைக் கண்ட கண்கள் கொண்டு மனக் கலக்கம் தரும் உலகப்பொருள் எதையும் கான் கனவிலும் பார்க்கமாட்டேன். == (கு) திருட்டி - திருஷ்டி, கண். 18. கவிசொலும் பேற்றை அருளுக - சொல்லும் பொருளுமென் உள்ளத்தில் ஊற்றெனத் தோன்றுதற்கே அல்லும் பகலும் அருளோ டமர்ந்திவ் வருளில் நெஞ்சக் கல்லும் கரையக் கவிசொலும் பேற்றைக் கனிந்தருள்வாய் கொல்லும் விடமுண்ட கண்டற் குகந்த குணவதியே! (உ) விஷ்த்தை உண்ட சிவபிராற்கு இனியவளே. நல்ல சொல்லும், பொருளும் என் உள்ளத்தே ஊற்றுப்