பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 வைஷ்ணவி சங்கிதிமுறை 25. உபதேசம் பெற இடருற்று விழினும் ஏந்திழை யேநான் இருணெறியிற் படருற்று விழா வகையுபதேசம் பகருதி நீ குடருற்ற வேதனை அப்பர்க் கொழித்தவர் கொஞ்சுகின்ற சுடருற்ற பொற்சோதி மேனிப் பரையே சுமங்கலியே! (உ) சூலை கோயால் குடல் வேதனையை அடைந்த அப்பருக்கு (திருகாவுக்கரசு சுவாமிகளுக்கு) அர். கோயை ஒழித்த சிவபெருமான் கொஞ்சிக் குலவும் ஜோதி உமையே! நித்ய கல்யாணி ! என் கஷ்ட காலத் திலும் கான் தவருன இருட்டு வழியிற் செல்லாத வண்ணம் எனக்கு உபதேசம் செய்தருள்க. (கு) படருற்று - சென்று. படர்தல் - செல்லுதல். படருற்று - துன்புற்று எனலுமாம். ஜைன மதத்திற் சேர்ந்திருந்த அப்பருக்குச் சூலை நோயைச் சிவபிரான் ஏவ, அக்கோய் ஜைன குருமார்களால் தீர்க்க முடியாது போக, அப்பர் அம்மதத்தை விட்டுச் சைவநெறியை மேற்கொண்டவுடனே, அங்கோய் சிவபிரான் திரு அருளால் தீர்ந்து, அப்பர் அருள்கெறியிற் சேர்ந்து, இறைவனுக்குப் பாடல்களைப் பாடினர். அப்பர் அருளிய பாக்கள் தேவாரத்தில் 4-5-6 திருமுறைகளாகும். 26. தேவியால் எல்லாம் உதிக்கும் ஒடுங்கும் அளியார் கமலத்தில் வாழ்ஆ ரணங்கே ; அகிலமுகின் ஒளியார் உளத்தில் உதித்தே ஒடுங்குமிவ் வுண்மையதை எளியார் அறியுந் தரமோ உரைத்தி, எழிலரசீ ! வளியார் பொழில் முல்லை வாயிலில் வாழ்கின்ற வைணவியே! (உ) தாமரையில் வாழும் தாயே! திருமுல்லை. வாயில் வைண்வித் தேவியே! சகல உலகும் உனது