பக்கம்:வ. உ. .சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. வானமாமலை

23

அரசு கையைக் கட்டிக்கொண்டு பார்த்துக் கொண்டிருக்கும் என்று நம்பினாரா? பணம் போட்டவர்களின் நோக்கம் வேறு. அவர்களது குறிக்கோள் லாபம். வ. உ. சி.யின் குறிக்கோள், இந்திய மக்களின் நம்பிக்கையையும் சுதேசிப் பற்றையும் வளர்த்து, ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுத்துவது.

அந்த நோக்கத்துக்கு முரணாகக் கம்பெனிப் பங்குதாரர்கள், அவரைச் செயலாளர் பதவியிலிருந்து விலகி, சம்பளம் வாங்கும் ஏஜென்டாக இருக்க ஒப்புக்கொள்ளும்படி கோரினார்கள். அவர்களது நன்றிகெட்ட தன்மையை வ.உ.சி. புரிந்து கொண்டு, அவர்களது கோரிக்கையை நிராகரித்தார். ஆனால், அவருடைய நண்பர்கள் ஏஜென்டுப் பதவியை ஒப்புக்கொள்ளும்படியும், அது சுதேசி இயக்க நோக்கங்களுக்கு இடையூறாக இருக்குமானால் சில மாதங்கள் கழித்துப் பதவியிலிருந்து விலகிக் கொள்ளலாமென்றும் சொன்னார்கள். நண்பர்களுடைய ஆலோசனையை ஏற்றுக்கொண்டு ஏஜென்டு பதவியை ஏற்றுக் கொண்டார். கம்பெனி நிர்வாகம் அவரைத் தூத்துக்குடிக்கு வெளியே பலநாட்கள் தங்கும்படி செய்தது. அவர் தூத்துக்குடியில் இல்லாத சமயத்தில் தம்முடைய சொந்த ஆதிக்கத்தை முதலாளிகள் அதிகரித்துக்கொள்ள முயன்றார்கள். அது தவிர, தூத்துக்குடிக்கு வெளியே பல நாட்கள் தங்கினால் சிதம்பரம் பிள்ளையால் அரசியல் வாழ்க்கையில் பங்கு கொள்ள முடியாது போய்விடும்.

அரசியல் வாழ்க்கை

பங்குதாரர்களிடம் சம்பளம் வாங்கும் ஊழியனாக எவ்வளவு நாள் வ. உ. சி.யால் உழைக்க முடியும்? லாபம் தவிர நோக்கமொன்றுமில்லாத சுரண்டல்காரர்கள் கப்பல் கம்பெனி நடவடிக்கைகளை, பிரிட்டிஷ் எதிர்ப்புப் போராட்டத்தின் ஓர் அம்சமாக நடத்துவதை விரும்பவில்லை. எனவே வ. உ. சி. தானே முயன்று கம்பெனிக்கு இடையூறு வரும் போதெல்லாம் தியாகங்கள் செய்து, சூதுகளையும் வஞ்சகங்களையும் பொதுமக்களிடம் வெளிப்படுத்தி—கண் போலக் காத்துவந்த கம்பெனியிலிருந்து ராஜினாமாச் செய்தார். ஏஜெண்டு என்ற கைவிலங்கை முறித்துவிட்டு, முழுமூச்சோடு அரசியல் வெள்ளத்தில் குதித்தார்.

அவர் சுதேசிக் கம்பெனியிலிருந்து ராஜிநாமாச் செய்த பிறகு நிறுவனத்தின் நிலைமை மோசமானது. சில மாதங்களுக்குப் பிறகு, பாரதியாரின் யோசனைப்படி மறுபடியும்,