பக்கம்:வ. உ. .சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி.pdf/47

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. வானமாமலை

45


கப்பல் நிர்மாணஞ் செய்யும் தொழிலையுஞ் செய்து காட்டிக் கற்பித்தல், இந்திய இலங்கை மாணவர்க்கும் மற்றும் ஆசியாக் கண்டத்து மாணவர்க்கும் கப்பலோட்டுந் தொழிலையும் கப்பல் நிர்மாணஞ் செய்யும் தொழிலையும் சாஸ்திர சம்பந்தமாகக் கற்பிக்கும் கலாசாலைகள் ஏற்படுத்தல், கப்பல் நடாத்துத் தொழிலிலும் வியாபார முறையிலும் இந்தியர்கள் இலங்கையர்கள் முதலிய ஆசியா கண்டவாசிகளுக்குள் ஐக்கிய பாவனையையுண்டுபண்ணி ஒற்றுமையாக உழைக்கச் செய்தல், பற்பல வியாபார ஸ்தலங்களிலுள்ள வியாபாரங்கட்கடுத்த கொள்வன கொடுப்பன தெரிந்து கொள்வதற்காக இந்தியா இலங்கை முதலிய ஆசியா கண்ட தேசத்தவர்கள் ஏஜெண்டுகளாக நியமித்தல், ஸ்டீமர்கள், ஸ்டீம் லாஞ்சுகள், படகுகள் முதலியன நிர்மாணஞ் செய்வதற்கும் அவைகளைச் செப்பனிடுவதற்கும் சுத்தப்படுத்துவதற்கும், துறைகளேற்படுத்தல்; கம்பெனியார் தீர்மானிக்கும் சுதேசியக் கைத் தொழில்களையும் வியாபாரங்களையும் நடத்துதல் முதலியனவாம்.

6 தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் மற்றும் இந்திய துறைமுகங்கட்கும் பிரயாணமும் வியாபாரமும் அபிவிருத்தியான நிலைமையிலிருப்பதால் கம்பெனியின் செலவும் ரிசர்வ் பண்டுக்கு வைத்துக்கொள்ளும் தொகையும் நீக்கி பெரியதோர் ஈவு கிடைக்குமாறு கணக்கிடப்பட்டிருக்கிறது.
7 100 பங்கு எடுக்கிற பங்காளிகள் டயரெக்டர்களாவதற்கு பாத்தியதையுடையவர்கள்; ஆனால் டயரெக்டர்கள் வருஷத்துக்கொரு தடவை பங்காளிகளின் ஆர்டினோம் மீட்டிங்கில் தெரிந்தெடுக்கப்படுவார்கள்.
8 எடுக்கப்படும் பங்குகளின் மொத்தத் தொகையில் ஐந்திலொரு பங்குத்தொகை முன்பணமாகச் செலுத்தப்பட வேண்டும். பாக்கிப் பங்குத் தொகை கம்பேனியார் வேண்டுங் காலங்களில் செலுத்தப்பட வேண்டும்.
9 கம்பேனியின் நன்மைக்காகவும், லாபத்துக்காகவும் பங்காளிகள், கம்பேனியின் ஸ்டீமர்களிலேயே பிரயாணமும், ஏற்றுமதி, இறக்குமதியும் செய்யவேண்டும்.
10 கம்பேனியின் பங்குகளை மற்ற சொத்துக்களைப் போல் அடமானம் கிரயஞ் செய்யலாம்; ஆனால் பணம் ஒரு பங்காளிக்கும் கம்பேனியிலிருந்து வாபஸ் கொடுக்கப்படமாட்டாது.