பக்கம்:வ. உ. .சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி.pdf/49

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இணைப்பு–3
நாளேடுகளில் செய்திகள்

சுதேசியமும் வ. உ. சி.யும்

நாம் அன்னிய நாட்டுச் சாமான்கள் வாங்குதலாகிய கொடிய செய்கையை முற்றிலும் விலக்கி, ஜாஸ்தி விலை கொடுத்தாகிலும் சுதேசிய சாமான்களையே வாங்க வேண்டு மென்றும், இவ்விதமாய் நாமெல்லோரும் ஒன்று சேர்ந்து நம்முடைய கைத்தொழிலை ஆதரித்தாற்றான் நாம் தற்காலம் நஷ்டத்திற்குட்பட்ட போதிலும் பிற்பாடு மிகுந்த இலாபத்திற்குள்ளாவோமென்றும், இவ்விதந்தான், ஜெர்மனி அமெரிக்கா, ஜப்பான் இவை போன்ற நாடுகள் தற்காலம் பெருமை பெற்று விளங்குகின்றனவென்றும், தற்காலத்தில் இந்தியாவிலுள்ள 30 கோடி ஜனங்களில் கோடி ஜனங்கள் ஒருவேளை வடிகஞ்சியினால் ஜீவிக்கின்றார்களென்றும்,11/2 கோடி ஜனங்கள் வரை அதுவுமில்லாமல் மிகவும் வருந்தியிருக்கிறார்களென்றும், மேலும் இந்தியாவில் பெரும்பான்மையோர் விவசாயத்தையே நம்பி, வர்த்தகத்தையும், கைத்தொழிலையும் முற்றிலும் மறந்து மிகவும் சோம்பேறிகளாய்த் திரிகின்றார்களென்றும், முன்னிருந்த நிலைமைக்கு அனைவரும் ஒருங்கு சேர்ந்து பாடுபட்டு நமது கைத்தொழிலையும், வர்த்தகத்தையும் நாளடைவில் அபிவிருத்திச் செய்யப்புகின், அங்ஙனமே நமக்கு நற்காலம் பிறந்து நமது அவாக்களையெல்லாம் முற்றிலும் தீர்த்துக் கொள்ளலாமென்றும், இன்னும் இவை போன்ற இந்தியா சம்பந்தமான அநேக காரமான விஷயங்களை எல்லாம் எடுத்துக் கூறிக் கடைசியாகப் பொது நன்மைக்காகச் சென்னையில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதேசீய நிதிக்கு ஜனங்களனைவரும் சந்துஷ்டியான காலங்களில் அவர்களாலியன்ற பொருளுதவி செய்ய வேண்டுமென்றும் கூறி முடித்தார்.

சுதேசமித்திரன், 12 அக்டோபர் 1906


திருநெல்வேலி ராஜத் துவேஷக் கேஸ்களில் சிஷைகள்

ஒருவருக்கு 10 வருஷமும், மற்றவருக்கு ஆயுசு பரியந்தமும் தீபாந்தர சிக்ஷை?, நினைக்கையிலேயே மயிர்க்கூச்செரி