பக்கம்:வ. உ. .சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி.pdf/51

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. வானமாமலை

49

களை மனத்தில் எண்ணியிருக்க மாட்டார். கவர்ன்மெண்ட் வக்கீல் அப்படிக் கேட்டுக் கொண்டிராவிட்டாலும் மிஸ்டர் பின்னி குறைவான தண்டனைகள் விதித்திருக்க மாட்டார் என்றே சொல்ல வேண்டும்.

சுதேசமித்திரன், தலையங்கம் 10 ஜூலை 1908

ஆங்கிலேயரும் வருந்தினர்

தேசபக்தர் சிதம்பரனாருக்கு விதிக்கப்பட்ட தண்டனை நியாயத்திற்கும் சட்டத்திற்கும் விரோதமானது. பிள்ளை யவர்களின் தியாகம் மகத்தானது. பிரட்டீஷ் சாம்ராஜியத்தின்பால் நல்லெண்ணம் உள்ளவர்கள் கூட, இந்தக் கொடுந் தண்டனையை வரவேற்கமாட்டார்கள்.

ஸ்டேட்ஸ்மன், கல்கத்தா

வங்காளமும் ஸ்ரீ சிதம்பரம் பிள்ளையும்

ஸ்ரீ சிதம்பரம் பிள்ளைக்கு மரணபரியந்தம் தீபாந்திர சிக்ஷை விதிக்கப்பட்ட செய்தி கேட்டுக் கல்கத்தா பத்திரிகைகள் அனைத்தும் அலறுகின்றன. இப்படிப்பட்ட கொடிய தண்டனைகளால் பிரிட்டீஷ் நீதியதிகாரத்திற்கே பெரும் அபகீர்த்தி உண்டாகுமென்றும், இப்படித் தண்டனை விதித்த மிஸ்டர் பின்லோவை மேற்படி கேஸில் ஜட்ஜாயிருக்கும்படி சென்னை கவர்ன்மெண்டார் நியமித்தது மிகவும் ஆச்சரியமாய் இருப்பதாயும் ‘அமிர்தபஜார்’ பத்திரிகை சொல்கின்றது. பாபு சுரேந்திரநாத் பானர்ஜியின் பத்திரிகையாகிய “வங்காளி”யும் இவ்வாறே கூறுகின்றது. இதுபோலவே வங்காளத்து இந்தியப் பத்திரிகைகளெல்லாம் கூறுகின்றன. ஆனால் ஆங்கிலோ இந்தியன் பத்திரிகைகள் மட்டும் ஒன்றும் பேசாமல் இருக்கின்றன.

சுதேசமித்திரன், 10 ஜூலை 1908