பக்கம்:வ. உ. .சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி.pdf/52

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வரலாறு படைத்த வ.உ.சி. வாழ்க்கை
1872 செப்டம்பர் 5—நெல்லை மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் பிறப்பு.
1894 பிப்ரவரி—வழக்கறிஞர் பயிற்சியில் தேர்ச்சி.
1895 வ.உ.சி. — வள்ளியம்மை திருமணம்.
1900 தூத்துக்குடியில் வழக்கறிஞராகப் பணி தொடங்குதல்
1901 வ.உ.சி. — மீனாட்சியம்மை திருமணம்.
1905 மே— பொ. பாண்டித்துரைச் சாமித் தேவர் அவர்களைத் தலைவராகக் கொண்ட மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பரிசோதக உறுப்பினராகப் பொறுப்பு.
1906 அக்டோபர் 16-சுதேசி கப்பல் நிறுவனம் தொடங்கப் பெற்றது. 1882ஆம் ஆண்டுக் கம்பெனிகள் சட்டப்படி எண் 85 கிரேட் காட்டன் சாலை, துரத்துக்குடி என்ற முகவரியைப் பதிவு அலுவலகமாகக் கொண்டு பதிவு செய்யப்பட்டது. பதிவு எண் 13 of 1906.
டிசம்பர்—சுதேசிக் கப்பல் நிறுவனத்துக்கு இரண்டு கப்பல்கள் வாங்க வ.உ.சி. பம்பாய் சென்றார். அவர் அங்கு இருக்கும்போது மூத்த மகனும் மனைவியும் உடல்நலம் குன்றியதையும் பொருட்படுத்தாமல் பம்பாயில் தங்கி, திலகரின் உதவியுடன் கப்பல்கள் வாங்கி வந்தார்.
1907 பாரதியாருடன் சூரத் காங்கிரசில் பங்கு பெற்றார்.
1908 நெல்லை தேசாபிமான சங்கம் உருவாகிறது. ஆறுமுகத்தம்பிரானைக் கொலை வழக்கில் விடுவித்துச் செல்வாக்குப் பெற்றார்.
பிப்ரவரி 3 முதல் மார்ச்சு 9 வரை துர்த்துக்குடிக் கடற்கரையில் சுப்பிரமணிய சிவாவுடன் தொடர் சொற்பொழிவுகள்.