பக்கம்:வ. உ. .சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி.pdf/53

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. வானமாமலை

51

1908 பிப்ரவரி 27— தூத்துக்குடி கோரல் மில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் தொடக்கம்.
மார்ச்சு 9-பிபின் சந்திரபால் விடுதலையைக் கொண்டாடினார்.
மார்ச்சு 9—நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் சிவாவுடன் கலெக்டர் விஞ்சு என்பவரைச் சந்தித்தார்.விஞ்சுக்கும் வ.உ.சி.க்கும் நடந்த உரையாடலைப் பாரதியார் இரண்டு பாடல்களாகப் பாடியுள்ளார்.
மார்ச்சு 12 - வ. உ. சி.யும் சுப்பிரமணிய சிவாவும் கைது செய்யப்பட்டனர்.
மார்ச்சு 13—வ.உ.சி. கைது செய்யப்பட்டதை எதிர்த்து, திருநெல்வேலியிலும் தூத்துக்குடியிலும் கடையடைப்பு, எதிர்ப்பு ஊர்வலங்கள், எழுச்சி.
மார்ச்சு 26—கூடுதல் மாவட்ட நீதிபதி வாலஸ் வழக்கு விசாரணையைத் தொடங்கினார்.
ஜூலை 7—மாவட்ட நீதிபதி பின்கே , வ. உ. சி. க்கு ஆயுள்தண்டனை வழங்கினார். நவம்பர் 4-உயர் நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை, ஆறு ஆண்டுகள் நாடு கடத்தலாகக் குறைக்கப்பட்டது. பிறகு, இதுவே ஆறு ஆண்டுகள் கடுஞ்சிறையாக மாற்றப்பட்டது.
1911 ஜூன் 17-மணியாட்சியில் மாவட்ட மாஜிஸ்டிரேட் (கலெக்டர் ஆஷ் , வாஞ்சிநாதனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1912 டிசம்பர் 12 —கண்ணனூர் சிறையிலிருந்து வ.உ.சி. விடுதலை செய்யப்பட்டார். ஆயினும் நெல்லை மாவட்டத்தில் நுழையத் தடை நீடித்தது.
1915 மார்ச்சு — லோகமாண்ய பால கங்காதர திலகரின் அழைப்பை ஏற்று, பூனா வந்து சேர்ந்தார்.
மார்ச்சு 8—திலகருடன் முதல் உலகப்போர் பற்றியும் ஜெர்மனி உதவியுடன் இந்தியாவில் புரட்சி நடத்துவது பற்றியும் விவாதித்தார்.

.