பக்கம்:வ. உ. .சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி.pdf/54

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

வ. உ. சி.


1919 மார்ச்சு — ரௌலட் சட்டத்தை எதிர்த்து நடந்த சத்தியாகிரகத்தையொட்டி காந்திக்கு ஆதரவு தந்தார்; காந்தியைச் சென்னையில் வரவேற்றுப் பேசினார்.
டிசம்பர் — சென்னை வந்திருந்த திலகருடன் சந்திப்பு. திலகர் தொடங்கிய ஹோம்ரூல் இயக்கத்தில் அன்னி பெசண்ட் அம்மையார் சேர்ந்திருந்தது குறித்து மாறுபட்ட கருத்தைத் தெரிவித்தார். அதனால் அந்த இயக்கத்தில் சேராதிருந்தார்.
1920 கல்கத்தா காங்கிரசில் கலந்து கொண்டார். காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தை எதிர்த்துக் காங்கிரசிலிருந்து விலகினார். கோவை வாசம்.
1924 வழக்கறிஞர் பணி செய்ய இருந்த தடை நீங்கி, சன்னது பெற்றுக் கோவில்பட்டியில் குடியேறினார். நெல்லை மாவட்டத்தில் நுழையக்கூடாது என்ற தடையும் நீங்கியது.
ஒத்துழையாமை இயக்கத்தைத் திருப்பிப் பெற்றவுடன் மீண்டும் காங்கிரசில் சேர்ந்தார், சேலம் மாவட்ட அரசியல் மாநாட்டில் தலைமையுரை நிகழ்த்தினார். ஆயினும் அரசியலில் தீவிர ஈடுபாடு கொள்ளவில்லை.
1933 காந்தியுடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்த போதும் அவரது அரிசனச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு காந்தி தமிழகம் வந்தபோது காரைக்குடியில் அவரை வரவேற்க நடந்த ஏற்பாட்டுக் கூட்டத்துக்கு வ.உ.சி. தலைமை தாங்கினார்.
1934 திருச்செந்தூரில் வ.உ.சி.யின் திருக்குறள் உரை வெளியிடப்பட்டது.
1935 அப்போது காங்கிரசின் தலைவராக இருந்த பாபு ராஜேந்திரப் பிரசாத் தென்னிந்தியச் சுற்றுப் பயணத்தின்போது தூத்துக்குடி சென்று வ.உ.சி.யைச் சந்தித்து மரியாதை செய்தார்.
1936 நவம்பர் 18—மறைவு.