பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

11


வங்காள மாநிலத்திலே தோன்றிய விபின் சந்திர பாலர், சித்த ரஞ்சன் தாஸ், சுபாஷ் சந்திர போஸ், அரவிந்த கோஷ் போன்றவர்கள் அவரவர் தேசிய உணர்வுகளிலே புயல்போல உழைத்து சுதந்திர உணர்ச்சியை மக்களிடம் வேகமாகப் பரப்பி வந்தார்கள்!

வங்காள மாநிலத்தில் விடுதலைப் போராட்டம் கர்லான் பிரபு காலத்தில் கடும் புயலாக வீசிக் கொண்டிருந்ததைக் கண்ட அவர், வங்க சுதந்திர வீரர்களின் போராட்டச் செயல்களின் வேரை அறுத்தெறியத் திட்டமிட்டார்.

அன்றைய இந்திய அரசு நிர்வாகத்தில், வங்காளம் மிகப் பெரிய மாகாணமாக இருந்தது. அதை இரண்டாகப் பிரித்து விட்டால், வங்காள மக்களின் தேசிய உணர்ச்சியின் பலம் வலிமையற்றதாகி விடும். அதனால், வங்காளிகளின் சுதந்திரப் போராட்டச் சக்தி குன்றி விடும் என்று எண்ணினார் கர்சன் பிரபு.

என்ன காரணத்தைக் கூறி வங்காள மாநிலத்தை இரண்டு துண்டாக்குவது என்று கர்ஸான் யோசித்தார் நிர்வாக வசதிக்காக வங்கத்தை இரண்டாகப் பிரிப்பது என்ற திட்டத்தை மக்கள் முன்பு அவர் வைத்தார். 1905-ஆம் ஆண்டில் வங்காள மாநிலத்தை இரண்டாகப் பிரித்தார் கர்ஸான் பிரபு!

வங்காளத்தைப் பிரித்து விட்டால், விடுதலைப் போராட்ட வேகம் தணியும்; வங்காள மக்களின் பலம் குன்றும் என்ற கர்ஸான் பிரபுவின் எண்ணம். அவர் நினைத்தபடி வெற்றி பெறவில்லை. அதற்கு நேர்மாறாக, வங்காள மக்களின் சுதந்திர உணர்ச்சி முன்பு இருந்ததை விட மேலும் பன்மடங்கு வேகமாக வளர்ந்தது!

ஒற்றுமையாக இருந்த வங்காள மக்களைக் கர்சன் பிரபு பிரித்து வைத்துவிட்டானே என்ற மனக் கொதிப்பால், எல்லா மக்களும் ஒன்று கூடி ஆங்கிலேயர் ஆட்சியை மட்டுமன்று, தனிப்பட்ட முறையில் வைசிராய் கர்சானையும் கர்ண கடூரமாக எதிர்க்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/13&oldid=1080561" இலிருந்து மீள்விக்கப்பட்டது