பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

வ.வே.சு.ஐயர்


ஆரம்பித்து விட்டார்கள். அவர்களிடையே தேசிய உணர்வு ஒரு புதிய உத்வேகத்தோடு கொதித்தெழுந்தது. அன்று வரையில் இல்லாத எதிர்ப்பைக் கர்சான் நிர்வாகத்திடம் அவர்கள் காட்ட ஆரம்பித்துவிட்டார்கள். வைசிராயும், தனது அதிகாரத்தை வரம்பு மீறிப் பயன்படுத்தி மக்களைப் பழிவாங்கியபடியே ஆட்சியை நடத்தி வந்தார்.

இதைக் கண்ட வங்காள உழவர்கள், தொழிலாளர்கள், பள்ளி ஆசிரியர்கள். மாணவர்கள் எல்லாரும் ஒருமுகமாகப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். தேசியக் கல்வியைப் பரப்புவதற்குரிய பள்ளிகளும், கல்லூரிகளும் அவர்களால் ஏற்படுத்தப்பட்டன. தெருக்கூத்துக்கள் மூலமாகவும், தேசப் பற்றுட்டிடும். பாடல்கள் நாடகங்கள் மூலமாகவும் மக்களிடையே சுதந்திர உணர்ச்சியை மூட்டினார்கள். இந்த நேரத்திலே இளைஞர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?

வெள்ளையர் ஆட்சியை எப்படி வீழ்த்துவது என்று அவர்கள் திட்டம் போட்டார்கள். எந்தெந்த இங்கிலீஷ்காரன் கர்சானுக்கு கைக் கூலியோ அல்லது யார்யார் கர்சானுக்குத் துண்டு கோலாக இருந்து தேசியப் போராட்ட வீரர்களைத் துன்புறுத்தினார்களோ, அல்லது வைசிராய்க்கு ஏவலர்களாக இருந்தார்களோ அவர்களை எல்லாம் கொன்றொழிப்பது என்ற முடிவுக்கு வந்து அவர்கள் சதித் திட்டம் தீட்டினார்கள் அவர்களை எங்கெங்கே கொல்வது, எப்படியெப்படிக் கொல்வது என்று திட்டம் வகுத்தார்கள். அப்போதுதான் சுயராச்சியம் கிடைக்கும் என்ற நம்பிக்கைக்கு அவர்கள் பலியானார்கள் அதன் விளைவு என்ன?

வங்காள மாநிலம் பிரிக்கப்பட்டு விட்டாலும் கூட, எல்லாப் பகுதி சிற்றூர், பேரூர், நகரங்களில் இளைஞர்கள் இரகசியச் சங்கங்களை உருவாக்கி அதனையே சதிக் கூடமாகவும் மாற்றிக் கொண்டார்கள். ஆசிரமங்கள் பல ஆங்காங்கே அவர்களால் உருவாக்கப்பட்டு அங்கேயும் இதே சிந்தனை ரேகைகளே ஓடின!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/14&oldid=1080563" இலிருந்து மீள்விக்கப்பட்டது