பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/20

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

வ.வே.சு.ஐயர்


பட்டம் பெற இருந்த விநாயக ராவ் சாவர்கர் எனப்படும். வி.டி.சாவர்கரை பிரிட்டிஷ் அரசு திங்க்ரா வழக்குடன் இணைத்து அவரையும் கைதுசெய்து அப்போது சிறையிலே அடைந்திருந்தது.

சிறைக்கு அடிக்கடி சென்ற சாவர்கரைச் சந்தித்துப் பேசுகின்ற ஒருதாடிக்கார இளைஞனைப் போலீசார் கண்கானித்து வந்தார்கள். அந்த இளைஞர் மீது ஸ்காட்லாண்ட் யார்டு போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. யார் இந்தத் தாடிக்கார வாலிபன்?

அந்த வாலிபரைக் கைது செய்யப் போலீஸ் திட்டமிட்டுக் கொண்டிருந்தது. ஆனால், அந்தத் தாடிக்காரரோ போலீஸ் செய்யப் போகும் செயலை முன் கூட்டியே தெரிந்து கொண்டதால் எச்சரிக்கையாக நடக்கலானார்! போலீஸ் தன்னைக் கைது செய்ய வர இருக்கிற நேரத்தையும், நாளையும் தெரிந்து கொண்ட தாடிக்கார இளைஞர். இலண்டன் நகரை விட்டு வெளியேறத் தயாரானார்!

பாதிராத்திரி வேளை! லண்டன் மாநகர மக்கள் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தார்கள். திடீரென ரகசியப் போலீசார் இந்தியா விடுதியிலே புகுந்து, முக்கிய பகுதிகளை எல்லாம் சோதனை செய்து வந்தனர். போலிசார் விடுதியை நாற்புறமும் சூழ்ந்து கொண்டார்கள்.

ஒரே ஒர் அதிகாரி மட்டும், மாறு வேடத்தில் உணவு விடுதியின் வாயிற்படி வழியாக உள்ளே நுழைந்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் குடுமியும், தாடியும் வைத்துக் கொண்டும், திடகாத்திரமான உடற்கட்டுடனும் பார்ப்பதற்கு ஒரு பராக்கிரம சாலியைப் போல உள்ள மனிதர் ஒருவர், அந்த விடுதியிலே இருந்து வெளியே வந்து கொண்டிருந்தார். அவரது கையில் பெட்டி ஒன்று இருந்தது.

தாடிக்காரரிடம், மாற்றுடையில் வந்த போலீஸ் அதிகாரி ஒரு கவரை நீட்டினார்.

தாடிக்காரர் அசகாய சூரர். அக் கவரைத் தனது கையால் கூடத் தொடவில்லை. ஆனால் அதன் மீது எழுதப் பட்டிருந்த பெயரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/20&oldid=1080720" இலிருந்து மீள்விக்கப்பட்டது