பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

வ.வே.சு.ஐயர்


 மாறு வேடப் போலீஸ் அதிகாரி விடுதிக்குள் போனார். ஒவ்வொருவரின் முகத்தையும் கூர்ந்து நோக்கினார் அனைவரின் வரலாற்றையும் பொறுமையோடு புலன்விசாரணை செய்தார்! அவர் யாரைத் தேடிவந்தாரோ அவரைக் கண்டு பிடிக்க முடியாமல் தோற்றார் - பாவம்?

ஸ்காட்லாண்டு யார்டு போலீஸ் அதிகாரியை ஏமாறவைத்துத் தப்பிய அந்தத் தாடிக்காரர் பிரான்ஸ் நாட்டின் தலை நகரான பாரீஸ் நகருக்குப் போய்ச் சேர்ந்தார். அங்கே காமா அம்மையாரின் உதவியோடு தங்கி இருந்தார். இந்தச் செய்தி பல நாட்களுக்குப் பிறகு தான்் லண்டன் நகர் ரகசியப் போலீசுக்குத் தெரிந்தது.

தம்மிடம் தந்திரமாகப் பேசி தப்பித்துச் சென்ற அந்தத் தாடிக்காரர்தான், போலீஸ் தேடிக்கொண்டிருந்த இந்திய இளைஞர் என்பதை அந்த ரகசியப் போலீஸ் அதிகாரி அறிந்தார். ஓர் இந்திய இளைஞன், தன்னை - அதாவது உலகப்புகழ் பெற்ற ஸ்காட்லாண்ட் பார்டு ரகசியப் போலீசையே ஏமாற வைத்துவிட்டுத்தப்பிச்சென்று விட்டானே, என்று ஆச்சரியத்தில் ஆழ்ந்து போனார்.

பல்வேறு இடங்களிலே மாறுவேடங்களோடு வலம் வந்த அந்தத் தாடிக்காரரை, பிரிட்டிஷ் ரகசியப் போலீஸ் வல்லவர்களால் கண்டு பிடிக்கவே முடியவில்லை.

இந்தியாவுக்கு வந்து சேர்ந்த அந்தத் தாடிக்காரர். புதுச்சேரியிலே இருந்தபடியே, லண்டனிலுள்ள ஸ்காட்லாண்ட் யார்டு போலீஸ் அதிகாரிக்கு தான் மிக ஜாக்கிரதையாக மீண்டும் இந்தியா வந்து சேர்ந்து விட்டதை தந்தி மூலம் அறிவித்தார்.

பிரிட்டன் ரகசியப் போலீஸ் படையை ஏமாறவைத்த அந்தத் தாடிக்காரர் யார் தெரியுமா? அவர்தான் தீவிர தேசபக்தர் வ.வே. சுப்பிரமணிய ஐயர் எனப்படும் வ.வே.சு. ஐயராவார். அவருடைய தீரம் செறிந்த வீர வரலாற்றைத் தொடர்ந்து படிப்போம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/22&oldid=1080724" இலிருந்து மீள்விக்கப்பட்டது