பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/31

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

29


தனது மகன் வழக்குரைஞரான சம்பவங்களை மனைவியிடமும், மருமகளிடமும் கூறிக் கூறி வேங்கடேச ஐயர் பெருமிதமடைந்தார் திருச்சி மாவட்ட நீதி மன்றத்தில் சுப்பிரமணியன் வழக்கறிஞர் ஆனார். அவர் தன்னிடம் வரும் வழக்குகள் விவரங்களை நன்றாகப் படிப்பார்! வெற்றி பெறுமா என்பதை எண்ணிப் பார்த்தே அந்த வழக்கை நடத்துவார்!

இவ்வாறு நான்கு ஆண்டுகள் திருச்சி நகர நீதி மன்றத்தில் சுப்பிரமணியம் தொழில் நடத்தி வந்தும் அவரது குடும்பத்துக்குப் போதிய வருமானமில்லை. மீண்டும் அவரைக் குடும்பக் கவலை பற்றிக் கொண்டது. தந்தையும் தனயனும் மனம் வருந்திக் கொண்டிருந்தார்கள்.

எவ்வாறு தமது வருமானத்தைப் பெருக்குவது என்று ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தார்கள் சுப்பிரமணியமும், அவரது தந்தையுமான வேங்கடேச ஐயரும் அப்போதுதான் யாரும் எதிர்பாராத ஒன்று நடந்தது!


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/31&oldid=1081584" இலிருந்து மீள்விக்கப்பட்டது