பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/34

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

வ.வே.சு.ஐயர்


வெற்றி பெற முடியவில்லை, ரங்கூன் நகரிலாவது வெற்றி பெற மாட்டோமா? என்ற ஏக்கம் சுப்பிரமணியத்திற்கு இருந்தது. அதனால், தன் பெற்றோர்களிடம் அவர் தன்நிலை, தனது தொழில் நிலை விளக்கங்களைக் கூறி, கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பது போல, தனது பெற்றோரின் சம்மத்தைப் பெற்றுக் கொண்டார்.

பசுபதியும், பாக்கிய லட்சுமியும், சுப்பிரமணியமும் ரங்கூன் நகருக்குப் பயணமானார்கள். ரங்கூன் நகரும் இந்தியாவைப் போல அப்போது பிரிட்டன் சாம்ராச்சியத்திலே இணைந்திருந்தது. அதனால், அவர்களுக்குப் பயணவசதிகளும் சுலபமாகவே இருந்தது.

இந்த ரங்கூன் பயணம்தான், சுப்பிரமணியன் வாழ்வில் ஒர் எதிர்பாராத திருப்பமாக அமைந்து விட்டது எனலாம்.

பசுபதி வாய்ச் சொல் வீரர். அல்லர் செயல்வீரர்; வசதிகள் யாவும் உள்ளவா, ரங்கூன் நகரில் செல்வாக்கும் பெற்றவர்; சொன்னதைச் செய்பவர் செய்வதைச் சொல்பவர்; பணம் குணத்தைமாற்றாது என்பதின் சான்றாளர்; அவர்கள் மீது அளவற்ற அன்புள்ளம் கொண்ட பண்பாளர்!

இரங்கூன் சென்றதும் தங்கை பாக்கியலட்சுமிக்கும் மைத்துனர் சுப்பிரமணியத்திற்கும் எல்லா வசதிகளையும் செய்து தனக்கு வேண்டிய பாரிஸ்டர் நண்பர் ஒருவரிடம் பசுபதி அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்தார். அவர் ரங்கூன் உயர் நீதி மன்றத்திலே பார்-அட்-லா வழக்குரைஞராகத் தொழில் நடத்தி வந்தார். அந்த ஆங்கிலேய பாரிஸ்டரிடம், தனது மைத்துனனது கல்வித் தகுதி, திறமைகளை எடுத்துரைத்து தனது மைத்துனரை உதவியாளாராக அமர்த்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

சுப்பிரமணியத்திடம் பேசிக் கொண்டிருந்தபோதே, அவரது அறிவாற்றலை நன்கு புரிந்து கூர்மையான, நுட்பத் திறனாளரான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/34&oldid=1082595" இலிருந்து மீள்விக்கப்பட்டது