பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/48

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

வ.வே.சு.ஐயர்


வேலைகளைச் செய்திட ஒற்றர்களை நியமித்தது. ஐயரையும் மற்ற இந்திய இளைஞர்களையும் கையோடு பிடிப்பதற்காக முடிவு செய்தது. அதற்கான சந்தர்ப்பத்தையும் எதிர் நோக்கிக் காத்திருந்தது.

சாவர்கர், வ.வே.சு போன்றோர் சாதாரணமானவர் அல்லர்! போலீஸ் விவரங்களை நன்றாகப் புரிந்தவர்கள். சிறந்த சிந்தனையாளர்கள் எதையும் ஆழமாக உணர்ந்து பார்த்துச் செயல்படக் கூடிய அறிவாளிகள் குறிப்பாகக் கூறுவதானால் லண்டன் ரகசியப் போலீஸ்காரர்களை விட எல்லாவற்றுள்ளும் கைதேர்ந்தவர்கள்! ரகசியப் போலீஸ் வல்லாளர்களையே திணறடிக்கும் திறமைசாலிகள் ஆவர்.

அது போலவே, லண்டன் ரகசியப் போலீசும் சாதாரணமானது அன்று! உலகப் புகழ் பெற்றது. போலீஸ் புலிகளுக்குள்ளேயே மிக சக்தியும், வல்லமையும், மதி நுட்பமும் உள்ளது ஸ்காட்லாண்டு யார்டு ரகசியப் போலீஸ்துறை! எனவே, இந்திய இளைஞர்களுக்கும் இரகசியப் போலீசுக்கும் இடையே ஒரு துப்பறியும் போரே நிகழ்ந்து கொண்டிருந்தது.

மராட்டியர் ஒருவர் இந்தியா விடுதிக்கு வந்தார். சாவர்கரைச் சந்தித்து சரளமான மராட்டிய மொழியிலே அவரோடு பேசினார். அவர் மராட்டிய மாநிலத்துப் பிரபுக்கள் பரம்பரை என்றும், பல் வைத்தியம் சம்பந்தமாகப் படிக்க லண்டன் வந்திருப்பதாகவும் அவரிடம் கூறினார். இந்தியா விடுதியில் தங்கிப் படிக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டார். எவர்க்கும் எதற்கும் மயங்காத சாவர்கர், இந்த மராட்டியப் பல்வைத்தியப் படிப்புக்கு வந்தவரிடம் அவரது பேச்சு வன்மை, மொழிவளமையைக் கண்டு மயங்கினார். அதனால், இந்தியா விடுதியில் தங்கிப் படிக்க அவரை அனுமதித்தார். அவர் பெயர் கீர்த்திகர். அவர் விடுதியிலே தங்கிய தோடு சாவர்கர் சங்கத்திற்கு ஒரு பவுனும், உணவுக்குரிய பணமும் கொடுத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/48&oldid=1082632" இலிருந்து மீள்விக்கப்பட்டது