பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/51

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

49


அவ்வளவுதான் கீர்த்திகன் ஆடிப்போனான்! நடுங்கினான்! உடலெல்லாம் உதறல்! என்ன நடக்குமோ என்று வியர்த்துப் போனான் அவன். நெஞ்சே அவனைச் சுட்டெரித்துக் கொண்டு இருந்தது.

தாழ்போட்ட வேகத்தோடு ஐயர் கீர்த்திகர் பக்கம் நோக்கி, "உளவு பார்ப்பது உமக்குப் பிடிக்காது, இல்லையா? அப்படியானால், அந்தக் கீழ்த்தரமான விபீஷண வேலையை இங்கே செய்து கொண்டிருக்கும் இனத் துரோகியார்? இதோ, இந்த - ரகசியக் கடிதங்களைப் போலீசுக்கு எழுதிய யோக்யன் யார்?" என்று முகத்தில் கோபம் கொப்பளிக்க அறையின் சோதனையிலே கிடைத்த கடிதங்களை எடுத்து வீசினார்

தன்மேல் வீசப்பட்ட கடிதங்களைக் கண்ட கீர்த்திகன் நடுங்கித் திணறினான். குப் என்று அவனது உடல் வியர்த்தது! பேச முடியாமல் ஊமையாக நின்று கொண்டிருந்தான் அவன்!

"இதோ பார், உண்மையைச் சொல்லிவிடு, இல்லையென்றால் சுட்டுக் கொன்று விடுவேன், என்று சொல்லிக் கொண்டே இடுப்பிலே செருகியிருந்த துப்பாக்கியை எடுத்து அவன் மார்புக்கு நேரே நீட்டினார் ஐயர்!

கீர்த்திகன் இருகையாலும் ஐயரை நோக்கிக் கும்பிட்டான்! "என்னைச் சுட்டு விடாதீர்கள், என்னைச் சுட்டு விடாதீர்கள்" என்று கதறினான்! ஐயருடைய காலிலே மரம் ஒன்று சாய்ந்தது போல விழுந்து விட்டான் அவன்.

ஐயர், எடுத்த துப்பாக்கியை மீண்டும் செருகிக் கொண்டு, எழுந்திரு! அங்கே போய், உட்காரு! என்றார். கீர்த்திகனும் எழுந்து அமர்ந்தான்-உடல் நடு நடுங்கியபடியே! பிறகு, அவன் பேசும் போது.

"நான் ரகசியப் போலீசாருக்கு கையாளாக இருந்து இங்குள்ள தகவல்களைச் சேகரித்து அனுப்பியது உண்மைதான். இனிமேல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/51&oldid=1082816" இலிருந்து மீள்விக்கப்பட்டது