பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/52

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

வ.வே.சு.


இந்த ஆள்காட்டி வேலையைச் செய்ய மாட்டேன். என்னைச் சுடாமல் விட்டு விடுங்கள். நான் ஓடி விடுகிறேன். இனி இந்த விடுதிப் பக்கமே திரும்ப மாட்டேன்" என்று அழுது கொண்டே கூறினான் கீர்த்திகன்.

ஐயர், கலகலவென்று சிரித்தார். கீர்த்திகா, உன்னை அவ்வளவு சுலபமாக அனுப்பி விடுவோமா? நான் சொல்வது போல் செய்தால் உன்னை ஒன்றும் செய்யாமல் விட்டு விடுகிறோம். நீயும் இந்தியாவுக்குத் திரும்பும் வரை இந்த விடுதியிலேயே தங்கலாம். என்ன சொல்கிறாய்? என்று கேட்டார் ஐயர்!

சரி என்று சம்மதம் தெரிவித்தான் கீர்த்திகன். ‘இதோபார், இனியும் நீ உளவாளியாகவே இரு. ஆனால் ஒன்று. நாங்கள் சொல்கிறபடி அறிக்கையைத் தயார் செய்து போலீசாரிடம் கொடுத்து வர வேண்டும். போலீசார் என்ன சொல்கிறார்களோ அதைக் கேட்டு எங்களிடம் கூறவேண்டும். அது மட்டுமன்று, இனிமேல் மாதம் இரண்டு பவுன் தரவேண்டும். என்றார் ஐயர்.

ஏற்றுக் கொண்டான் கீர்த்திகன் ஐயரது நிபந்தனைகளை வ.வே.சு. ஐயர் சொன்னபடியே தவறாமல் செய்து வந்தான். பாவம், ஸ்காட்லாண்ட் யார்டு போலீசார்! ஏமாந்து கொண்டே வந்தார்கள் வழக்கம் போல ஐயர் உட்பட அனைவரும் ரகசிய சங்கப் பணிகளைச் செய்து வந்தார்கள்.


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/52&oldid=1082817" இலிருந்து மீள்விக்கப்பட்டது