பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/56

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

வ.வே.சு.ஐயர்




“காந்தியடிகள் தனது மூன்று நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் விழாவில் கலந்து கொள்வதாகக் கூறினார்! ஒன்று விருந்து விழாவை எந்த உணவு விடுதியிலும் நடத்தக் கூடாது. இரண்டு ஏதாவது ஒரிடத்தில் எளிமையாகவே நடத்த வேண்டும். மூன்று இந்திய முறை உணவே விருந்தில் பரிமாறப்படவேண்டும். எக் காரணத்தைக் கொண்டும் புலால் உணவோ மதுபான வகைகளோ விருந்தில் இடம் பெறக் கூடாது” என்பதே காந்தியடிகள் விதித்த நிபந்தனைகளாகும். இந்த மூன்றையும் ஐயர் நிறைவான மனத்தோடு ஏற்றுக் கொண்டார். விழா விருந்துக்குரிய நாளையும் அடிகள் குறித்து ஐயரிடம் கொடுத்ததை அவரும் ஏற்றுக்கொண்டார்.

பெற்றுக் கொண்ட நாளையும், அடிகள் அறிவித்த நிபந்தனைகளையும் நண்பர்கள் கூட்டத்தில் ஐயர் குறிப்பிட்டு அவர்களுடைய எண்ணங்களையும் அறிந்தபோது, எல்லாரும் காந்தியாருடைய கருத்துக்களை முழுமனதோடு அப்படியே ஏற்றுக் கொண்டார்கள்.

விருந்து நடைபெறுவதற்கான ஓரிடத்தை உறுதி செய்து, எல்லா விருந்தினர்களுக்கும் அழைப்புகள் அனுப்பப்பட்டன. அதற்கான மற்ற வேலைகளும் நடந்து கொண்டிருந்தன. இந்திய உணவு முறைகளைத் தயாரிப்பதற்கான உணவுச் சாமான்களை ஐயருட்பட சிலர் கடைகளிலே வாங்கி வந்தார்கள், பாத்திரங்கள் தேடித்தேடி வாங்கி வரப்பட்டன.

விருந்து நாளன்று ஐயர் வெளியே சென்றிருந்தார். இந்திய வாலிபர்கள் அனைவரும் சமையல் வேலையில் ஈடுபட்டுச் செய்து கொண்டிருந்தார்கள். அந்த இடத்திற்கு நடுத்தர வயதுடைய ஓர் இந்தியர் வந்தார். இந்தியர் உடையிலே இருந்த அவர் சமையல் செய்து கொண்டிருந்தவர்களுக்கு உதவிட முன் வந்தார்.

இந்திய உடையிலே வந்தவரைப் பார்த்த இந்திய வாலிபர்கள், ‘ஐயோ பாவம், ஏதோ ஏழை இந்தியர் போலிருக்கு சரி இவரும் நம்முடன் சமையல் வேலைக்கு உதவட்டும்; விருந்து உண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/56&oldid=1083377" இலிருந்து மீள்விக்கப்பட்டது