பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/59

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



சுதந்திரத்திற்காக பட்டத்தைக் கைவிட்டார்!

லண்டன் நகரம் சென்ற ஐயர் அங்கே உள்ள லிங்கன் சட்டக் கல்லூரியிலே சேர்ந்து படித்தார். அதற்கான தேர்வும் வந்தது. அதை எழுதிய ஐயர் வெற்றியும் பெற்று பாரிஸ்டரானார். ஆனால், அவரால் அந்தப் பாரிஸ்டர் பட்டத்தைப் பெற முடியவில்லை ஏன்?

பாரிஸ்டர் பட்டம் பெறுவோர் யாராக இருந்தாலும், அவர் பிரிட்டிஷ் அரசுக்குரிய ராஜவிசுவாசப் பிரமாணம் அதாவது உறுதிமொழியை எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு தான் பாரிஸ்டர் என்ற அந்த அடையாளப் பட்டமே வழங்கப்படும்.

ஆனால், வ.வே.சு. ஐயர் ஆங்கிலேயர் அரசுகுப் பரம விரோதி! பிரிட்டிஷ் மன்னரைத் தமது அரசராக ஏற்றுக் கொள்ள மறுப்பவர் மட்டுமன்று, வெள்ளையரின் பிரிட்டிஷ் ஆட்சியின் ஆணிவேரை இந்தியாவிலே அறுத்தெறிய அரும்பாடுபட்டு வருபவர்.

அத்தகைய அரசியல் பகையைத் தனது மனதிலே ஆழப் பதித்துக் கொண்டவர்; எப்படிப் பிரிட்டிஷ் அரசுக்கு ராஜ விசுவாசமாக நடப்பேன் என்று சொல்லுவார்? அதனால் வெள்ளையரிடம் விசுவாசமாக நடக்க முடியாது என்று அவர் பிரமாணம் எடுக்க மறுத்து விட்டார். பாரிஸ்டர் என்ற வயிற்றுப் பிழைப்புக்குரிய பட்டத்தை விட எனது நாட்டின் சுதந்திர மானம்தான் பெரியது என்று மதித்தார். அதனால், பட்டம் பெறுவதை விட எனது தாய் நாடே பெரியது என்று ஐயர் தீர்மானம் செய்தார். அதனால், பாரிஸ்டர் தேர்வில் அவர் வெற்றி பெற்றுவிட்ட பிறகும் கூட, அதற்குரிய பாரிஸ்டர் என்ற பட்டத்தைப் பெறும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/59&oldid=1083473" இலிருந்து மீள்விக்கப்பட்டது