பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/62

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

வ.வே.சு.ஐயர்


திரண்டு வந்திருந்தார்கள். அதே நேரத்தில், லண்டனுக்குப் பாரிஸ்டர் படிப்புப் படிக்கவந்த சாவர்கர், வ.வே.சு. ஐயர், அவர்களது நண்பர்கள் கூட்டத்தினர், டாக்டர் ராஜன் திருமலாச்சாரியார் போன்ற தேசபக்த வாலிபர்களும் திரண்டு வந்திருந்தார்கள்.

மதன்லால் திங்க்ராவைக் கண்டித்துக் கண்டனக் கூட்டத்தை நடத்தியவர்கள் பேசிய பேச்சின் காரசார சொற்களைக் கேட்டு, குடும்பத்தோடு அக் கூட்டத்துக்கு வந்த வெள்ளையர்கள் எல்லாம் மிகவும் மகிழ்ந்தார்கள். இறுதியாக, திங்க்ரா கொலை வெறிச் செயலைக் கண்டித்துக் கண்டனத் தீர்மானம் ஒன்று ஒருமனதாக நிறைவேறியது என்ற ஒரு குரல் மேடையிலே கேட்டது.

உடனே, ஓர் எதிர்ப்புக் குரல் இடிபோல கூட்டத்தின் மத்தியிலே எழுந்தது கூட்டம் குழம்பியது. யார் இந்தத் தீர்மானத்தை எதிர்த்துக் குரல் எழுப்பியது என்று எல்லாரும் குரல் வந்த பக்கமே திரும்பினார்கள்!

"நிறைவேற்றப்பட்ட தாக நீங்கள் கூறிய அந்தத் தீர்மானம், ஒருமனதாக நிறைவேறவில்லை. அதை நான் பலமாக எதிர்க்கிறேன்" என்றார் சாவர்கர்!

கூட்டத்தில் பரபரப்போடு எழுந்த சிலர், ‘அவனை அடக்கி உட்கார வை! யாரவன்?’ என்று கத்தினர். தலைவர் சுரேந்திர நாத் பானர்ஜி, அவனைப் பிடித்து உட்காரவை, என்றார்! சாவர்கரை அமரவைக்கச் செய்த முயற்சிகள் வீணாயிற்று; உட்கார வைக்க முடியவில்லை-தலைவராலும்

அந்த நேரத்தில் மேடையிலே உட்கார்ந்திருந்த பவநகரி, சாவர்கருக்கு அருகிருந்த பால்மர் என்ற கலப்பின வெள்ளையனுக்குக் கண் ஜாடை காட்டினார்.

எழுந்தான் அந்த நீக்ரோ-வெள்ளைக் கலப்பினன்! விட்டான் ஒரு குத்து சாவர்கர் முகத்தில் மூக்குக் கண்ணாடி நொறுங்கியது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/62&oldid=1083481" இலிருந்து மீள்விக்கப்பட்டது