பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/81

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
குற்றால நீரருவியிலே வ.வே.சு.ஐயர் மறைந்தார்

காந்தியடிகள் பிரிட்டிஷ் அரசுக்கு விடுத்த கருணை வேண்டுகோளுக்கு ஏற்றவாறு, வ.வே.சு.ஐயர் மேலிருந்த வழக்குகளை எல்லாம் ஆங்கிலேயர் ஆட்சி திரும்பப் பெற்றுக் கொண்டதால், கொலை வழக்குச் சட்டப் பிரச்னையிலே இருந்து அவர் விடுதலை பெற்றார்!

காந்தியடிகளிடம் அவர் கொடுத்த வாக்குப்படி, அறப்போர் முறையுடன் அகிம்சைத் தத்துவத்தையும் மக்களுக்கு எடுத்துரைத்தார். அவர் சிறந்த ஓர் எழுத்தாளராக, சிந்தனையாளராக, ஆன்மிக ஞானியாக, செயல்வீரராக, மனோபலமுடைய ஆண்மையாளராக, ஒழுக்க சீலராக, மனிதாபிமானியாக நேர்மை தவறாதவராக, ‘நா’ நயம் படைத்தவராக, சுதந்திர மானாபிமானியாக, விடுதலை வீரராக, பன்மொழிப் புலமையாளராக, ஆறுமொழி ஆய்வு நிபுணராக, பத்திரிக்கை ஆசிரியராக, தமிழ் இலக்கிய வித்தகராக, சிறந்த நூல் படைப்பாளராக, நல்லதோர் மொழிபெயர்ப்புக் கலைஞராக, தமிழே எனது உயிர் மூச்சு என்ற உறுதிப்பாடுடைய தமிழராக, நூல் உரையாசிரியராக, உலகம் சுற்றி வந்த அனுபவ அறிஞராக, குருகுல ஆசானாக, ஆசிரமவாசியாக, வ.வே.சு.ஐயர் விளங்கினார்!

பல துன்பங்களையும் துயரங்களையும் சுமந்து கொண்டு ஊர் ஊராகச் சுற்றியலைந்த அனுபவ ஆசானாக விளங்கிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/81&oldid=1083995" இலிருந்து மீள்விக்கப்பட்டது