பக்கம்:ஶ்ரீ மஹாபாரதம் - சாந்தி பர்வம்.djvu/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஸ்ரீ:

சாந்திபர்வம்.

நூற்றெழுபத்துமூன்றாவது அத்யாயம்.

மோக்ஷதர்மம்.

***

(பீஷ்மர், ஒருபிராம்மணருக்கும் ஸேனஜித்தென்னும் அரசனுக்கும் நடந்த ஸம்பாஷணையையும் அந்தப்பிராம்மணர் ஸேனஜித்துக்குச்சொல்லிய பிங்களோபாக்யானத்தையும் சொல்லியது.)

யுதிஷ்டிரர், "பூஜ்யர்களிற்சிறந்தவரே! ராஜதர்மங்களைப் பற்றியவைகளும் சுபங்களுமான தர்மங்கள் பிதாமஹரான உம்மால் சொல்லப்பட்டன. நீர் ஆச்ரமிகளுக்குரிய மிகச்சிறந்ததான தர்மத்தையும் சொல்லவேண்டும்" என்றுசொன்னார்.

பீஷ்மர், "ஸ்வர்க்கலோகத்திற்குக் காரணமானதும் ஸத்யமான பயனை உண்டு பண்ணுவதுமான தர்மமானது எல்லாவிடத்திலும் விதிக்கப்பட்டிருக்கிறது. இவ்வுலகில் பலதுவாரங்களுள்ள தர்மத்தின் செய்கையானது பயனற்றதாகிறதில்லை. பாதர்களிலுத்தமனே! எந்த எந்தமனிதன் எந்த எந்தவிஷயத்தில் நிச்சயத்தை அடைகிறானோ அவனவன் அந்த அந்தவிஷயத்தையே அறிவான்; வேறுவிஷயத்தை அறியமாட்டான். உலகத்திற்குஸாதனமான பொருள்கள் எந்த எந்த விதமாக அஸாரமான பொருள்களாக அறியப்படுகின்றனவோ அந்த அந்தவிதமாக அந்தப்பொருள்களில் வெறுப்புண்டாகும். இதிற்சந்தேகமில்லை. யுதிஷ்டிர ! இவ்விதமாக உலகத்தைப் பலதோஷமுள்ள தென்று நிச்சயம் செய்துகொண்டபின் புத்தியுள்ளமனிதன் தன்னுடைய மோக்ஷத்திற்குக் காரணமானவழியில் முயற்சி செய்யவேண்டும்" என்று சொன்னார். யுதிஷ்டிரர்,"பிதாமஹரே! பொருள் நஷ்டமானாலும் மனைவியோ மகனோ தந்தையோ மரணமடைந்தாலும் உண்டாகும் சோகத்தை விலக்கிக்கொள்ளக்கூடிய புத்தியை எனக்கு உபதேசிக்க வேண்டும் " என்று கேட்க, பீஷ்மர் சொல்லத்தொடங்கினார்.

"பொருள் நஷ்டமானாலும் தாரமோ புத்திரனோ தந்தையோ மரணமடைந்தாலும் மனிதன், 'அந்தோ! (ஆத்மாவைத்தவிர மற்றது) துக்கம்' என்று ஆலோசித்துக்கொண்டு சோகம் விலகும்வழியைச் செய்துகொள்ளவேண்டும். இவ்விஷயத்திலும் ஸேனஜித்தென்னும் அரசனிடம் அவனுக்குமித்திரரான ஒருபிராம்மணர்வந்து கூறிய பழைய இவ்விதிஹாஸத்தை உதாஹரிக்கிறார்கள். புத்ரசோகத்தால்