பக்கம்:ஶ்ரீ மஹாபாரதம் - பீஷ்ம பர்வம்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பீஷ்ம பர்வம்

றது. பூமியிலுள்ளபுழுதி மேலேகிளம்பிய ஒன்றும் அறியப்பட வில்லை. ஸூர்யன் சேனையினாலுண்டான புழுதியினால் மூடப்பட்டு அஸ்தமனத்தை அடைந்தவன்போலானான். அந்தஸமயத்தில் மாம்ஸங்களையும் ரக்தங்களையும் பொழிகின்றமேகமானது சேனைகளெல்லாம்நனையும்படி பொழிந்தது. அது ஆச்சரியமாயிருந்தது. பிறகு, பருக்கைக்கற்களை இறைக்கிறகாற்றும் நூறுநூறாகவும் ஆயிரமாயிரமாகவும் அந்தச்சேனைகளை (அக்கற்களால்) அடித்துக்கொண்டு மெல்லத்தோன்றியது. ராஜேந்திரரே! கொந்தளிக்கும் கடல் போன்ற இரண்டுசேனைகளும் குருக்ஷேத்திரத்தில் மிக்கஸந்தோஷத்துடன் யுத்தம் செய்வதற்கு ஆயத்தமாக நின்றன. யுகத்தினுடையமுடிவில் இரண்டு கடல்களுக்குச்சேர்க்கையுண்டாவதுபோல, அவ்விரண்டு சேனைகளுக்கும் ஆச்சர்யகரமான சேர்க்கை உண்டாயிற்று. பூமி முழுவதும், தேர்களும் யானைகளும் குதிரைகளும் காலாட்களும் வெளியில் செல்ல, பாலர்களும் விருத்தர்களுமே மிச்சமாயிருப்பதினால் ஒருவரும் இல்லாதது போலாயிற்று. பரதர்களிற் சிறந்தவரே! பிறகு அந்தக்கௌரவர்களும் பாண்டவர்களும் ஸோமகர்களும் ஒரு பிரதிஜ்ஞையை ஏற்படுத்தி யுத்த தர்மங்களை நிலை நாட்டினார்கள். 'யுத்தஞ்செய்து முடிந்த பிறகு நமக்கு ஒருவருக்கொருவர் ப்ரீதி யுண்டாகவேண்டும். ஸமமானவர்கள் யுத்தத்துக்காக எதிர்க்கவேண்டும். பின்னும், ஒருவனுக்காவது அந்யாய யுத்தம் எவ்விதத்தாலும் நேரக்கூடாது. பேச்சினால் சண்டையிடுவதில் முயல்கின்றவர்களோ பேச்சினாலேயே எதிர்த்து யுத்தஞ்செய்யவேண்டும். சேனையின் மத்தியிலிருந்து ஓடிப்போனவர்கள் ஒருபொழுதும் கொல்லத்தக்கவரல்லர். தேராளி தேராளியோடும் யானைவீரன் யானைவீரனோடும் குதிரைவீரன் குதிரைவீரனோடும் காலாள் காலாளோடும் யுத்தம் செய்யவேண்டும். யுத்தவீரர்கள் வீரவாதங்களைச் செய்துகொண்டு சேர்க்கைக்கும் இஷ்டத்திற்கும் உத்ஸாஹத்திற்கும் பலத்திற்கும் தக்கபடி யுத்தம் செய்ய வேண்டும். நம்பிக்கைவைத்தவன் மீதும் பயந்தவன் மீதும் ஆயுதம் பிரயோகிக்கக்கூடாது. வேறொருவனோடு போர் புரிகின்றவனும் [1]அஜாக்ரதையுள்ளவனும் அவ்வாறே யுத்தத்தில் புறங்காட்டினவனும் ஆயுதமிழந்தவனும் கவசமுடைந்தவனும் ஒருகாலும் கொல்லத்தக்கவரல்லர். ஸாரதிகள் மீதும் குதிரைகள்மீதும் சஸ்திரங்களைக்கொண்டுவந்து கொடுக்கிறவர்கள் மீதும்

பேரிகை அடிக்கிறவர்கள் மீதும் சங்கத்தை முழக்குகின்றவர்கள்


  1. 'சரணமடைந்தவனும்' என்பது வேறுபாடம்.