பக்கம்:ஶ்ரீ மஹாபாரதம் - பீஷ்ம பர்வம்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஸ்ரீ மஹாபாரதம்

மீதும் எவ்விதத்தாலும் ஆயுதங்களைப் பிரயோகிக்கத்தகாது' என்று இவ்விதமாக அந்தக் கௌரவர்களும் பாண்டவர்களும் ஸோமகர்களும் ப்ரதிஜ்ஞைசெய்துகொண்டு ஒருவரை ஒருவர்பார்த்து மிக்க வியப்படைந்தார்கள். பிறகு மஹாத்மாக்களான அந்தப்புருஷ சிரேஷ்டர்கள் (குருக்ஷேத்திரத்தில்) பிரவேசித்துச் சேனையிலுள்ள வர்களோடு மிகவும் ஸந்தோஷமடைந்து மனத்தில் ஊக்கமுள்ளவர்களானார்கள்.


இரண்டாவது அத்யாயம்.

ஜம்பூகண்டவிநிர்மாணபர்வம். (தொடர்ச்சி)


(வியாஸர் திருதராஷ்டிரனுக்கு யுத்தத்தைப்பார்ப்பதற்குக் கண்கொடுப்பதாகக்கூறியதும், திருதராஷ்டிரன் யுத்தத்தைக் கேட்கமட்டும் விரும்பியதும், வ்யாஸர் ஸஞ்சயனுக்கு யுத்த விஷயத்தில் ஸர்வஜ்ஞத்வத்தையளித்து யுத்தத்தைத் திருதராஷ்டிரனுக்குச் சொல்லும் படி ஏவித் துர்நிமித்தங்களுண்டாவதைக் கூறியதும்.)

பிறகு மகிமையுடையவரும் எல்லா வேதங்களையுமறிந்தவர்களுள் சிறப்புற்றவரும் பரதகுலத்தில் பிறந்தவர்களுக்குப்பாட்டனாரும் (எல்லாவற்றையும்)நேராகப்பார்ப்பவரும் கீர்த்திபொருந்தியவரும் நடந்ததையும் நடக்கிறதையும் நடப்பதையும் அறிந்தவரும் ஸத்யவதியின் புத்திரருமான வியாஸமகரிஷி நடக்கப்போகிற கோரமானயுத்தத்திற்காகக் கீழ்த்திசையிலும் மேற்றிசையிலும் நிற்கின்ற இரண்டு சேனைகளையும்பார்த்து, அப்பொழுது ஏகாந்தத்திலிருந்துகொண்டு, துக்கிக்கின்றவனும் தைன்யமுற்றவனும் புத்திரர்களுடைய அநீதியைப் பற்றி ஆலோசிக்கின்றவனுமான திருதராஷ்டிரமகாராஜனைப்பார்த்து, "அரசனே! உன்னுடையபுத்ரர்களும் மற்ற அரசர்களும் காலனால் சூழப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் யுத்தத்தில் ஒருவரையொருவர் எதிர்த்து நாசஞ்செய்யவேபோகிறார்கள். பாரத! அவர்கள் காலனால் சூழப்பட்டுநாசமடைகையில் நீ காலத்தினுடைய மாறுபாட்டையறிந்து துக்கத்தில் மனத்தைச்செலுத்தாதே. அரசனே! புத்ர! நீ இந்தயுத்தத்தைப்பார்ப்பதற்கு விரும்புவாயாயின் உனக்குக் கண்ணைக்கொடுக்கிறேன். இந்தயுத்தத்தைப் பார்" என்று சொல்ல, திருதராஷ்டிரன், "பிரம்மரிஷிகளுள் சிறந்தவரே! ஞாதிகளுடைய வதத்தைப்பார்ப்பதற்கு நான் பிரியப்படவில்லை. ஆனால், உம்முடைய