பக்கம்:ஶ்ரீ மஹாபாரதம் - பீஷ்ம பர்வம்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பீஷ்ம பர்வம்

அருளினால் இந்தயுத்தத்தை முழுதும் நான் கேட்கக்கடவேன் என்று பிரார்த்தித்தான். அந்தத்திருதராஷ்டிரன் யுத்தத்தைப் பார்ப்பதற்கு விரும்பாமல் கேட்பதற்குவிரும்புமளவில் வரமளிக்கும் பிரபுவானவ்யாஸர் ஸஞ்சயனுக்கு ஒருவரத்தைக் கொடுத்தார். வ்யாஸர், "ராஜனே! இந்தஸஞ்சயன் உனக்கு இந்தயுத்தத்தைச் சொல்லுவான். இவவனுக்கு யுத்தத்தில் எல்லாவிஷயமும் கண்ணுக்குப்புலப்படும். அரசனே! ஸஞ்சயன் ஞானக்கண்ணையடைந்து யுத்தத்தை உனக்கு உரைப்பான். ஸர்வஜ்ஞனுமாவான். வெளிப்படையாகவோ ரஹஸ்யமாகவோ பகலிலோ இரவிலோ (நடக்கும்) எல்லாவற்றையும் மனத்தினாலே எண்ணப்பட்டாலும் ஸஞ்சயன் அறியப்போகிறான். இவனைச் சஸ்திரங்கள் பிளவா. இவனைச் சிரமம் வருத்தாது. இந்த ஸஞ்சயன் உயிருடன் இந்தயுத்தத்தினின்று விடுபடப்போகிறான். பரதஶ்ரேஷ்டனே! இந்தக்கௌரவர்களுக்கும், எல்லாப்பாண்டவர்களுக்கும் நான் கீர்த்தியைப் பிரஸித்தப்படுத்தப்போகிறேன். நீ துயரமடையாதே. நரசிரேஷ்டனே! தெய்வச்செயல். துயரப்படத்தகாது. இது அடக்குவதற்குமுடியாதது. எங்குதர்மமோ அங்குஜயம்" என்று கூறினார். மகிமைபொருந்தியவரும் மிக்க பாக்கியசாலியும் கௌரவர்களுக்குச் சிறந்தபாட்டனாருமாகிய அந்த வ்யாஸர் இவ்வாறுசொல்லிவிட்டுத் திரும்பவும் திருதராஷ்டிரனைப் பார்த்து, (பின்வருமாறு) சொல்லத்தொடங்கினார். "மகாராஜனே! இந்தயுத்தத்தில் பெரியநாசமுண்டாகப்போகிறது. அவ்வாறே இப்பொழுது பயத்தைக் கொடுக்கின்ற நிமித்தங்களையும் காண்கிறேன். [1]சியேனங்களும் [1]க்ருத்திரங்களும் காக்கைகளும் [1]கங்கங்களும் கொக்குகளோடு சேர்ந்து த்வஜங்களுடைய நுனிகளில் விழுகின்றன; கூட்டமும் கூடுகின்றன. பக்ஷிகள் ஆனந்தத்துடன் ஸமீபத்தில் ஸம்பவிக்கக்கூடியயுத்தத்தை எதிர்பார்க்கின்றன. இறைச்சியைத் தின்பவைகளான ஜந்துக்கள் யானை குதிரைகளுடைய மாம்ஸங்களைப் பக்ஷிக்கப்போகின்றன. பயங்கரங்களும் பயத்தைத் தெரிவிப்பவைகளுமான கழுகுகள் நடுப்பகலில் தெற்குத்திக்கை நோக்கி நான்குபக்கங்களிலும், 'கடா! கடா!' என்று சப்தத்தை வெளிப்படுத்திக்கொண்டு கூச்சலிடுகின்றன. பாரத! நாள்தோறும் காலைஸந்தியிலும் மாலை ஸந்தியிலும் உதயாஸ்தமனகாலங்களில் சூரியனைக் [2]கபந்தங்களால் சூழப்பட்டதாகக் காண்கிறேன். வெளுப்புசிவப்பான ஓரங்க ளுள்ளவைகளும் கறுத்திருக்கின்ற இடை வெளியுடையவைகளும்


  1. 1.0 1.1 1.2 கழுகுகளின் வகைகள்.
  2. தலை இல்லாத சரீரங்கள்.