பக்கம்:ஶ்ரீ மஹாபாரதம் - பீஷ்ம பர்வம்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஸ்ரீ மஹாபாரதம்

மின்னலோடுகூடியவைகளும் மூன்றுநிறமுடையவைகளுமான [1]பரி வேஷங்கள் மாலைக்காலத்தில் தவறாமல் சூரியனைச் சூழ்ந்துகொள்ளுகின்றன. (அமாவாஸ்யையில்) பாபகிரஹங்களால் ஆக்ரமிக்கப்பட்டி ருக்கிறசூரியசந்திரர்களுக்கு இருப்பிடமான நக்ஷத்திரத்துடன் கூடியதும் இரண்டு ஸூர்யோதயகாலங்களைத்தொடாத [2]க்ஷயதிதியுடன் கூடியதுமான அஹோராத்திரத்தை நான்பார்த்தேன். அது பயத்தின் பொருட்டேயாகும். கார்த்திகைப்பெளர்ணமாஸியை ஒளியை இழந்ததாகக்காண்கிறேன். செந்தாமரை நிறம்போன்ற நிறமுடைய ஆகாயத்தில் சந்திரன் அக்நியின்நிறம்போன்ற நிறமுள்ளவனானான். வீரர்களும், பூமியில் பிரஸித்திபெற்றவர்களும் சௌர்யமுள்ளவர்களும் இருப்புலக்கை போன்றகைகளையுடையவர்களுமான அரசர்களும் ராஜகுமாரர்களும் கொல்லப்பட்டுப் பூமியை வியாபித்துக்கொண்டு [3]உறங்கப் போகிறார்கள். இரவில் சண்டைபோடுகின்ற பன்றி பூனை இவ்விரண்டினுடைய பயங்கரமான மிக்கசப்தத்தை ஆகாயத்தில் நாள்தோறுங் கேட்கிறேன். தேவதாபிரதிமைகளும் நடுங்குகின்றன; சிரிக்கவும் சிரிக்கின்றன; வாய்களால் ரத்தத்தையும் கக்குகின்றன; வேர்க்கின்றன; கீழேயும் வீழ்கின்றன. அரசனே! அடிக்கப்படாமலே துந்துபிகள் உரக்க ஒலிக்கின்றன ; குதிரைகளோடு சேர்த்துப்பூட்டப்படாமலே க்ஷத்திரியர்களுடைய மஹாரதங்கள் நகர்கின்றன; குயில்களும் [4]சதபத்ரங்களும் காடைகளும் பாஸங்களும் கிளிகளும் ஸாரஸபக்ஷிகளும் மயில்களும் கோரமான ஒலிகளை வெளி யிடுகின்றன. பருங்கிரிடிகள் என்று பெயர்கொண்ட கறுத்த விட்டில் பூச்சிகள் உலோகங்களை மூக்கினால் கொத்திக்கொண்டு குதிரைகளின் முதுகின்மீது உட்கார்ந்து கத்துகின்றன. அருணோதயகாலத்தில் நூறுநூறாகச் சலபங்களுடைய கூட்டங்கள் அதிகமாகக்காணப் படுகின்றன. இரண்டு ஸந்தியாகாலங்களிலும் திசைகள் எரிச்சலோடு கூடியனவாக விளங்குகின்றன. பாரத! மேகம் புழுதியையும் இறைச்சியையும் வர்ஷிக்கின்றது. அரசனே! நல்லோர்களால் கொண்டாடப்பட்டதும் மூவுலகங்களிலும் பிரஸித்திபெற்றதுமான அருந்ததி நக்ஷத்திரமானது இதோ வஸிஷ்ட நக்ஷத்திரத்திற்கு முந்திவிட்டது. அரசனே! இதோ சனியானவன் ரோஹிணியைப் பீடித்துக்கொண்டு நிற்கிறான். சந்திரனுடையகளங்கமானது நாசமடைந்துவிட்டது. ஆதலால் பெரியபயம் ஸம்பவிக்கப்போகிறது. மேகமில்லாத ஆகாயத்-


  1. சூரியனைச்சுற்றி வட்டமாயிருக்கும் ஒரு கோடு.
  2. வேறுபாடம்.
  3. மரிக்கப்போகிறார்கள் என்பதுபொருள்.
  4. ஒரு பறவை.