பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வந்த ஹசரத் செய்யது தாஹா ஆலிம் சாகிபு என்பார் விழைந்தார். தமது ஞான்ாசிரியர் அருளிய திருப்பாடற்றிரட்டினை அச்சிற் பதிப்பிக்கும் பணிக்கான பொருளுதவியை மனமுவந்து வழங்குவதற்கு ஷம்சுத்தாசீனவர்கள் முன் வந்தார். புலமை மிக்க சான்றோராகிய கொட்டாம்பட்டி எம். கருப்பையாப் பாவலர் அவர்களும் செய்யது தாஹா ஆலிம் சாகிபின் மைத்துனரான - கோட்டாறு கா. ப. செய்கு தம்பிப் பாவலர் அவர்களும் * நூலைப் பதிப்பிக்கும் பணியில்துணை புரிய, சென்னை பூரீ.பத்மநாப விலாசம் அச்சுக் கூடத்தில் நூற்பதிப்பு நடைபெற்று கி.பி. 1895-ஆம் ஆண்டில் இறையருளால் நூல் வெளியிடப் பட்டது. தமிழக இஸ்லாமிய பெருமக்கள் மகிழ்வு கொண்டவராய் இத்திருப் பணியை மேற்கொண்ட அனைவரையும் பாராட்டினர். - ஹாமீம் புரம் மேலப்பாளையத்தின் தென் பகுதியில் தமக்குச் சொந்தமான ஹாமீம் புரம் என்னும் பரந்த அளவிலான நிலப்பரப்பில் நூற்றுக்கணக்கான ஏழை, எளியோர், வீடுகளற்றோர்களுக்கு இலவசமாக மனைகள் வழங்கியும், வீடுகள் கட்டிக் கொடுத்தும் ஆங்கோர் நகரத்தை உருவாக்கி அங்கு வசிக்கும் மக்களுக் குரிய தேவைகள் அறிந்து உதவிகள் பலவும் ஷம்சுத்தாசீனவர்கள் செய்து வந்தார். - - 'ஹாமீம்' என்பது இறைவனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வழங்கப் பட்டிருக்கும் சிறப்புப் பெயர்களுள் ஒன்று என்பதும், அச்சொல் ஞானியார் பாடலில் மிகுதியாக பயின்று வருவதுமாகும் என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது. . ஹாமீம் பள்ளி மதரசா இஸ்லாம் சிறப்பித்துக் கூறும் அறச் செயல்களுள், இறைவனை வழிபட இறையில்லம் கட்டுவித்தல், சன்மார்க்கக் கல்விச் சாலைகள்

  • 'திருக்கோட்டாற்றுப் பிள்ளைத் தமிழ்', 'திருக்கோட்டாற்றுப் பதிற்றுப் பத்தந்தாதி ஆகிய நூல்களை கா.ப. செய்கு தம்பிப் பாவலரும் 'திருக் கோட்டாற்றுக் கலம்பகம் என்ற நூலை எம். கருப்பையாப் பாவலரும் ஞானியார் சாகிபு மீது கவினுறப் பாடி, அன்னாருக்குப் புகழ் மாலைகளாகச் சூட்டியுள்ளனர்.