பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(90)
பாங்கி தலைவியாருமை சாற்றல்.
(இ-ள்.) தலைவி கிடைத்தற்கரியனென்று பாங்கி கூறுதல்.
அறிவே யுருவா யவதரித் தெங்க ளருந்தவத்தின்
செறிவே யெனவருந் தெய்வத மின்முன் சினந்தெதிர்ந்தோர்
முறிவே தரப்பொரு தோன்ஷம்சுத் தாசீன் முதிர்கிரியீர்
பிறிவே தருமுரை யாதொன்றும் யாமங்குப் பேசரிதே.
- தலைவனின்றியமையாமையியம்பல்.
(இ-ள்.) தலைவியல்லாது வாழ்வெனக்கில்லையெனத் தலைவன் கூறுதல்.
சொன்னமி லாது சுகம்வரு மோவென்றுஞ் சூழ்ந்தரசர்
சின்னமி லாதழிப் போன்ஷம்சுத் தாசீன் செழுங்கிரிவாய்ப்
பின்னமி லாதொளிர் போரு ளீர்கைப் பிடிபடுமோ
ரன்னமி லாதின் றமையுங்கொ லோவென்ற னாருயிரே.
(91)
பாங்கி நின்குறை நீயே சென்றுரையென்றல்.
(இ-ள்.) தலைவயினிடத்து நினக்கு வேண்டுவனவற்றை நீயே சொல்லென்று
பாங்கி கூறுதல்.
வாயே யெவர்க்கும் வருங்குறை சொற்றிட வாய்த்துளதிந்
நாயே னெதற்கு நவிலவொ ணாதுற்ற நற்றமிழ்க்கோர்
தாயே யெனவருள் வோன்ஷம்சுத் தாசீன் றனிச்சிலம்பி
னீயே நிகழ்த்துக நின்குறை யாவுமந் நேரிழைக்கே.
பாங்கியைத் தலைவன் பழித்தல்.
(இ-ள்.) தலைவன் பாங்கியை தித்தித்துக் கூறுதல்.
செயலா லுயர்ந்தபு மான்ஷம்சுத் தாசீன் சிமையமின்னின்
கயலர் யமர்ந்த கடுவிழி பாய்ந்து கலங்குமென்றன்
மயலாங் கனற்கு மழையாய் நினைத்ததின் வார்த்தை முற்றும்
புயலாய் முடிந்தது பூவையன் னீரென்ன புத்தியிதே.
(93)
குறையுறவுணர்தன் முதலிதுகாறு நான்காநாள் நிகழ்ச்சியென் றுணர்க. .
பாங்கி பேதைமை யூட்டல்.
(இ-ள்.) தலைவி பிறர்துயரமறியாளென அவளது பேதைமையைப்பாங்கி
தலைவனுளங் கொளச் சாற்றல்.
பாரார் பழிச்சும்பு மான்ஷம்சுத் தாசீன் பதிக்கரசே
காரார் கரிகலை மான்முத லாம்பல கான்விலங்கை
(92) |
96