பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யோரா துறவதைத் தூனுணும் வேட ருவந்தளித்த கூரா ரயில்விழி நின்னோ வறியுங் குணமிலளே. (94) காதலன்றலைவி மூதறிவுடைமை மொழிதல். (இ-ஸ்.) அவ்வாறு கூறிய பாங்கியை நோக்கி முதிர்ந்த அறிவினையுடையாள் தலைவியாதலின் அவளையங்ங்னங் கூறற் பாலையல்லையென்று தலைவன் ...' . கூறுதல். வாயா லுலகம் வழுத்துந்தம் மெண்ண மறிவிழிகொண் டோயா துரைத்தெனக் குன்னையுந் தந்துடைந் தோடுநரைத் தாயாய்ப் புரந்தருள் வோன்ஷம்சுத் தாசீன் சயிலமன்னா யேயா மதனையு மேயவட் கோவில்லை யீர்ங்குணமே - (95) பாங்கிமுன்னுறு புணர்ச்சிமுறையுறக்கூறல். (இ-ஸ்.) இவ்வாறு கூறக்கேட்ட பாங்கி முன் நின்வேட்கை தீர்த்தாளென்ற கூறினையே? அங்ங்ணமேயின்னங்கூடுகவென்று கூறுதல். முன்னா லறிந்ததின் முற்றிழை தன்னை முடுகுதற்குப் பின்னா லொருதுணை வேண்டுங்கொ லோபுவிப் பெண்ண்ண்ணங்கின் மன்னா யுதித்தபு மான்ஷம்சுத் தாசீன் மலையவெற்ப தன்னால் வருந்துயர் தானறி வாளங்குச் சாருதியே. - (96) தன்னிலை தலைவன் சாற்றல். (இ-ஸ்.) அதுகேட்டதலைவன்வேட்கை நோயால் வருந்துந்தன்னிலைமையைப் பாங்கிக்குக் கூறுதல். கடலிற் படிந்தெழு காவகம் புக்குக் கனிந்ததென்ற லுடலிற் புகப்புனைந் தாலுந்தன் சீர்த்தி யுலகனைத்து நடலிற் பெரியபு மான்ஷம்சுத் தாசீனன் ன்ாடனையிர் விடலி லவண்மயல் வெந்திக் குனையன்றி வேறிலையே. (97) பாங்கியுலகியலுரைத்தல். - (இ-ஸ்.) உலகில் வேட்கை கொண்டார் சான்றோரை முன்னிட்டு வரைந்து கொள்வர். அவ்வாறுலகியலாதலால் நீயும்வரைந்து கொள்கவெனப் பாங்கி கூறுதல். மறையார் மொழிப்படி மானிலத் தெங்கு மகிழ்வுறநன் னிறையார் கனிதரு நீண்மனங் காண்பது நேர்மையல்லாற் பொறையார் சுகுணப்பு மான்ஷம்சுத் தாசீன் பொதியவெற்பிற் குறையார் மொழிபல கூறிலென் னோவுயர் கொற்றவனே. (98) 97