பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைமகன் மறுத்தல். (இ-ள்.) அவ்வுலகியலைத் தலைவன்வேட்கையாற்றானாய் மறுத்தல். வருத்தி மயக்கு மயனோ யளித்தவம் மாதரசை - விருத்தி யுறவரைந் தேற்றிடென் றாயிது வெற்றரைக்குச் செருத்தி யிளம்பிறைச் சேய்ஷம்சுத் தாசீன் சிமையமன்னாய் பருத்தி விதைத்துப் படங்கொள நாடுமப் பான்மையன்றே. (99) பாங்கியஞ்சியச்சுறுத்தல். (இ-ள்.) பாங்கி இந்நிகழ்ச்சி பிறரறிவரென்று பயந்தவளாய்த் தலைவனை அப்புனம் விட்டுப்போக அச்சமுறுத்திக் கூறுதல். மாலையும் வந்ததெம் மன்னர்பொல் லார்வந்து வாய்ந்தவறச் சாலையு நாடுமுள் ளோன்ஷம்சுத் தாசீன் றடஞ்சிலம்பிற் சோலையுங் கொல்லையுஞ் சூழ்வர்வி டாரகல் சூரனுமவ் வேலையுட் போந்தன னிற்கிங்கென் வேலையில் வேலையிலே, (/00) தலைவன் கையுறை புகழ்தல். (இ-ள்.) இனிக்காலந் தாழ்த்தலாகாதென்றுதான்கொண்டுவந்த கையுறையைத் தலைவன் புகழ்ந்து கூறுதல். தழையே யுடைக்குத் தாள முலைக்குத் தகுமலர்தும் மழையேய் குழற்கு வளைக்குக் குவளை மகிழ்ந்துலகம் பிழையே பறப்புரப் போன்ஷம்சுத் தாசீன் பெருஞ்சிலம்பிற் கழையே பொருபுயத் தீர்கொணர்ந் தேன்கொளுங் கையகத்தே. //0/) பாங்கி கையுறை மறுத்தல். (இ-ஸ்.) அங்ங்னம் புகழப்பட்ட கையுறையைப் பாங்கி யிகழ்ந்து மறுத்துக் கூறுதல். ஈவ துயர்வினி யேற்ப திழிவென வெங்குமுரை யாவ தறிந்தன மாவியு மேற்கில மாய்ந்தெளியோர் மேவ வறையறை வேள்வும்சுத் தாசீன் வியன்சிலம்பிற் ரேவ மறக்குலம் யாமெமக் கேணிவை தேர்மன்னனே. (/02) ஆற்று நெஞ்சினோடவன் புலத்தல். (இ-ஸ்.) பாங்கி மறுத்தலைச் சகியாத நெஞ்சுடனே தலைவன் வருந்திக் கூறுதல். என்செய்த தோமன மேதழை நம்போ லிருந்துலர்ந்து மின்செய்த வேல்விழி வேண்டா தொறுத்து விரிமலர்சேர் 98