பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்செய்த மார்பன்பு மான்ஷம்சுத் தாசின் பொதியவெற்பிற் கொன்செய்த வன்சொற் கொழுங்கனற் கேநம்மைக் கூட்டினளே. (/03) பாங்கி யாற்றுவித் தகற்றல். - (இ- ள். இங்ஙனம் வருந்துதலைக் கண்ட பாங்கி ാഖങ്ങു நாளைவாவெனக் கூறிவிடுத்தல். குடியிற் பிறங்குங் குலக்கொழுந் தாமென்றன் கொற்றவைசிற் றடியிற் பணிந்தங் கமைவன சொற்றின் றகன் றரார் முடியிற் படுபதத் தோன்ஷம்சுத் தாசீன் முதிர்கிரிவாய் விடியிற் பெறுவலுன் கைத்தழை போதிவெவ் வேற்கிறையே. (/04) இவற்றுள் - தலைவன் கூற்றாயினவெல்லாம் இரந்துபின்னிற்றற்கும்; பாங்கி கூற்றாயினவெல்லாஞ் சேட்படுத்தற்கு முரியன. இதுகாறும் ஐந்தாநாள்நிகழ்ச்சியென்க. இரந்து குறைபெறாது வருந்திய கிழவோன் மடலே பொருளென மதித்தல், (இ-ஸ்.) மறுநாட்காலையில் வந்ததலைவன் பாங்கியாற்காரியமின்றெனக்கருதி இரந்து குறைமுடியா தாயினோமென்று வருத்தமுற்று இனி நமக்குப் பொருளாவது * மடலேறலேயெனத் தன்னுள்ளே மதித்துக் கூறுதல். மாறாக் கொடிய மயலஞர் கொண்டு மயங்கிநெஞ்சே நீறாக் கரிந்த நெடுந்துயர்க் கேதிலர் நீடுமுடற் கூறாக் கயிற்காக் கோன்ஷம்சுத் தாசீன் குளிர்வரைவாய்ப் பேறார்சஞ் சீவிநிப் பெண்ணையல் லாலில்லைப் பேசுதற்கே. (/05) பாங்கிக்குலகின்மேல் வைத்துரைத்தல். (இ-ள்.) தலைவன் அம்மடலேற்றினை உலகின் மேல் வைத்துப்பாங்கிக்குக் கூறுதவ. வீனா யொருத்திசெய் காமவெந் தீயுண் மிடைமிடைந்தோர் துனா யிருந்து துயரடைந் தோரென்றுஞ் சொன்னமணிப் பூனா ரிணைப்புயத் தோன்ஷம்சுத் தாசீன் பொதியவெற்பி லூனா ருயர்பனை பூர்ந்துறு வாரந்த வொண்டொடியே. (106) * மடலேறலாவது பனங்கருக்காற் குதிரையும்பனந்தருவினுள்ளனவற்றால்வண்டி முதலானவுஞ்செய்து அக்குதிரையின்மேலேறுவது. அங்ங்ன மேறுவான்றிகம்பரனாய்த் தான் காமித்த தலைவியினுருவை யொருபடத்திற் றன்கையாலெழுதி அப்படத்தின் றலையிலே தன்பெயரை யெழுதித் தன்கையிற் பிடித்து நடுவூருள்ளே நாற்சந்தி லாகார நித்திரையின்றி அப்படத்தின்மேற் பார்வையையு மனத்தையுமிருத்தி ஆசைவயத்தனாய் வேறுணர்ச்சியின்றிஆவுரிஞ்சினும் அழல்மேற்படினுமறிதலின்றிமழைவெயில்காற்றான் மயங்காதிருப்புழி, அவற்றைக்கண்ட அவ்வூரிலுள்ளோர்.பலருங்கூடிவந்து நீ மடலேறிச் 39