பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோதனை தந்தால் நீ யிச்சித்த பெண்ணைக் கொடுக்கச் செய்வோமென்று கூற, அதற்கவ னிசைந்தானாயினரசனுக்கறிவித்து அவனேவலால் ஏறவேண்டு; அங்ங்ணமேறும்போது பூனையெலும்பு எருக்கம்பூ இவைகளாற் கட்டிய மாலை புனைந்து கொள்ளல் வேண்டும். அக்குதிரையின் வடத்தை யிழுத்தலும், அக்குதிரையந்திரத் தினுருளை யுருண்டோடும் போது பனங்கருக்குஅறுத்த விடமெல்லாம் இரத்தம் வெளிப்படாது வீரியம் வெளிப்படின் அப்போ தவளை யலங்கரித்து அவனுக்கு அரசன் கொடுக்கச் செய்தல் வேண்டும். இரத்தம் வெளிப்படி லவனை யரசனாற் கொலை செய்துவிடல் வேண்டும் என்பன புலவரா னிருமிக்கப்பட்ட வழக்கு. தலைவன்றன்மேல் வைத்துரைத்தல் (இ-ள்.) தலைவன் அம்மடலேறுவேனென்று பாங்கிக்குக் கூறுதல் வேலையி னோங்குமிக் கோன்ஷம்சுத் தாசீன் வியனசலச் சோலையி லாடும்பைந் தோகையன் னிர்மடல் சூழ்ந்தெருக்க மாலையும் பூளையு மற்றவும் பூண்டினி மன்னுமதி காலையி லும்மூர் வலம்வரு வேனும்மைக் காண்பதற்கே. (/07) பாங்கி தலைமகளவயவத்தருமை சாற்றல். (இ-ஸ்.) அவ்வாறு கூறக்கேட்ட பாங்கி படமெழுதியபின்னன்றோ? மடலேறுவது. ஆதலால்தலைவியவயவந் தீட்டுதற் கருமையென்று கூறுதல். குடையு மரசுங்கொள் கோன்ஷம்சுத் தாசீன் கொழுங்கிரிவா படையுமென் காரிகை கோவையந் தாதி யனைத்துமொரு தடையும் வராம லெழுதினு நன்னூல் தருமியலு நடையு முரையு மெழுதலெவ் வாறு நவிற்றரசே, (/08) தலைமகன் றன்னைத்தானே புகழ்தல். (இ-ள்.) இவ்வாறெழுத லரிதென்று கூறிய பாங்கியைநோக்கித் தலைவன் றன்னைத்தானே புகழ்ந்து கூறுதல். மண்டலத் தோர்பெரு மான்ஷம்சுத் தாசீன் மலையநிலை கொண்டவர்க் காகாக் குறையுள தோவின்றென் கூர்ங்கரத்தால் விண்டமின் வேய்ந் தொளிர் காயமுஞ் சொர்க்கமு மேவிடையல் லண்டமு முள்ளுரு வோடமைப் பேமெமக் காரினையே. (/09) பாங்கி யருளியல் கிளத்தல். (இ-ள்.) அவ்வாறு தலைவன் கூறக்கேட்ட பாங்கி அருண்முறைமை கூறுதல். விண்ணைப் பழித்தகை யான்ஷம்சுத் தாசீன் மிளிர்தடித்தென் கண்னைப் பொருவகண் ணாளபல் லண்டமுங் காணுயிரு மண்ணைப் பிரிந்து மறுகுற நீகொளும் வன்னெஞ்சினிப் பெண்ணைக்கொன் றோவொரு பெண்ணைக் கொளலென்ன போருளே. //0) 1 QC